புத்தகத்தின் பெருநிலம்

புத்தகத்தின் பெருநிலம், ஆ.சிவசுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, பக். 238, விலை 210ரூ. நாட்டார் வழக்காற்றியலில் புலமையாளரான நூலாசரியர், ‘உங்கள் நூலகம்’ இதழுக்காக எழுதிய நூல் அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். தேர்வு செய்யப்பட்ட 22 கட்டுரைகள் சமூகவியல் – மானிடவியல், வரலாறு, சமயம் – தத்துவம், வாழ்க்கை வரலாறு, இலக்கியம் என்ற தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன. நூல் அறிமுகக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் அந்த நூலின் சாராம்சத்தை மிகவும் எளிமையாகவும், சுவைபடவும் விளக்குகின்றன. நூலின் சிறப்புகளை மட்டுமன்றி, அது கூற வந்த, கூறியுள்ள […]

Read more

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள்

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள், கிழக்கு பதிப்பகம், விலை 150ரூ. விறுவிறுப்பான தகவல்கள் அழகு முத்துக்கோன், பூலித்தேவர், ஹைதர் அலி, வேலு நாச்சியார், தீரன் சின்னமலை, கட்டபொம்மன், திப்பு சுல்தான், ஜான்சி ராணி, வாஞ்சிநாதன், பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ், வ.உ.சி. என்று நீளும் தேசபக்தர்களின் வீரம் செறிந்த வரலாறு விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதுபோன்ற நூல்கள் இருந்தாலும் இந்நூலாசிரியர் தகவல்களைப் பதிவு செய்வதில் ஆழ்ந்த கவனத்தையும் வரலாற்றப் பார்வையும் கொண்டவர் என்பதால் இந்த நூல் சிறப்பாக வந்துள்ளது. பூலித்தேவன் ஆங்கிலேயர்களால் தூக்கிலடப்பட்டார் என்னும் […]

Read more