வாய்மொழிக் கதைகள்
வாய்மொழிக் கதைகள், ஆ.சிவசுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.145.
வாய்மொழிக் கதைகள் பற்றிய விளக்கமான ஆய்வு நுால். அவற்றின் வகைமை, சேகரிப்பது, பனுவலாக்கம் செய்வது பற்றி எல்லாம் விரிவாக உள்ளது. பண்பாட்டை அறிவதில் வாய்மொழிக்கதைகளின் முக்கியத்துவத்தை நுட்பமாக உரைக்கிறது. அதன் உள்ளடக்கத்தை பகுப்பாய்வு செய்து, புராணக் கதை, பழமரபுக்கதை, நாட்டார் கதை என்ற வகைமைக்கு உட்படுத்தியுள்ளார். அவை பற்றி தனித்தனியாக விளக்கம் தரப்பட்டுள்ளது.
வாய்மொழிக் கதைகளின் சூழல் பயன்பாடு பற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. அவற்றை சேகரிப்பது, பனுவலாக்கம் செய்வதற்கான ஆய்வு உத்தியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. இந்த துறையில் ஆய்வு செய்வோருக்கு மிகவும் உதவும்.
நன்றி: தினமலர்,11/4/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031343_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818