தமிழர் வீரம்
தமிழர் வீரம், ரா.பி. சேதுப்பிள்ளை, பாரி புத்தக நிலையம், 184/88, பிராட்வே, சென்னை 108, பக். 96, விலை 30ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-138-5.html
சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர். சொல் ஆராய்ச்சியில் வல்லவர். எதுகை, மோனையுடன் பேசும் ஆற்றல் பெற்றவர். தமிழ் இன்பம் என்ற நூலுக்கு முதன்முதலில் சாகித்ய அகடமி பரிசு பெற்றவர். தருமை ஆதீனத்தால், சொல்லின் செல்வர் என்ற பட்டத்தைப் பெற்ற பாராட்டுக்குரியவர் நூலாசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை. கடல் கடந்து மாற்றாரை கலக்கியது தமிழர் வீரம் என்று சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வீர மாண்பை திறம்பட எடுத்துரைக்கிறார். எட்டுத்தொகை நூலான புறநானூறு, உலகப் பொதுமறை திருக்குறள், பெருந்தொகை போன்ற நூல்களை ஆங்காங்கே ஒப்பிட்டுக் காட்டியுள்ளதும் சிறப்பு. இந்நூல் தமிழர்கள் மட்டுமல்லாமல், தமிழ் அறிஞர்கள் எல்லாரும் படித்து இன்புறுவர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. -ராஜ். நன்றி: தினமலர் 16/10/11.
—-
வாடிக்கையாளர்களை வசப்படுத்துங்கள், எல்.வி. வாசுதேவன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான்ன் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 191, விலை 90ரூ.
எளிய உதாரணங்களைக் கொண்டு ஆசிரியர் விளக்குகிறார். ஒரு பெட்டிக் கடைக்காரர், ஒரு மளிகைக் கடைக்காரர் மற்றும் ஓட்டல் முதலாளிகள் தங்கள் வாடிக்கையாளர்களைத் தேக்கி வைத்துக்கொள்ள, எவ்வாறு செயல்பட்டனர் என்பதை எடுத்துக் கூறுகிறார். ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் இரண்டு சக்கரங்களாக நினைக்கச்சொல்கிறார். ஒரு சமயம் ஒரு நிகழ்ச்சியில் சரியான நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என நினைத்து, காந்தியண்ணல் ஒரு சைக்கிளை ஓட்டிக்கொண்டு விரைந்தார். காலம் பொன்போன்றது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. சிறந்த விற்பனைக்கும், வாடிக்கையாளரை கவரவும் சரியான வழிகாட்டி. -எஸ். குரு. நன்றி: தினமலர் 16/10/11.