தமிழ்ச்சுடர் மணிகள்
தமிழ்ச்சுடர் மணிகள், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை 108, விலை 230ரூ. மறைந்த தமிழறிஞர் எஸ். வையாபுரிப்பிள்ளை எழுதிய இந்நூல் மிகப் புகழ் பெற்றது. தொல்காப்பியர், திருவள்ளுவர், கபிலர், கம்பர், சடையப்ப வள்ளல், பரிமேலழகர் உள்பட 24 தமிழ்ச்சான்றோர்களின் வரலாறுகளை விரிவாகவும், சுவைபடவும் எழுதியுள்ளார் வையாபுரிப்பிள்ளை. நீண்ட இடைவெளிக்குப் பின் சிறந்த கட்டமைப்புடன் இந்நூல் வெளிவந்துள்ளது. திருவள்ளுவர் பற்றி ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து இவர் எழுதிய வாழ்க்கைக்குறிப்பு குறிப்பிடத்தக்கது. அதில் ஒரு பகுதி வருமாறு, இவர் வள்ளுவர் குடியிற் பிறந்தவர். […]
Read more