தமிழ்ச்சுடர் மணிகள்
தமிழ்ச்சுடர் மணிகள், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை 108, விலை 230ரூ.
மறைந்த தமிழறிஞர் எஸ். வையாபுரிப்பிள்ளை எழுதிய இந்நூல் மிகப் புகழ் பெற்றது. தொல்காப்பியர், திருவள்ளுவர், கபிலர், கம்பர், சடையப்ப வள்ளல், பரிமேலழகர் உள்பட 24 தமிழ்ச்சான்றோர்களின் வரலாறுகளை விரிவாகவும், சுவைபடவும் எழுதியுள்ளார் வையாபுரிப்பிள்ளை. நீண்ட இடைவெளிக்குப் பின் சிறந்த கட்டமைப்புடன் இந்நூல் வெளிவந்துள்ளது. திருவள்ளுவர் பற்றி ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து இவர் எழுதிய வாழ்க்கைக்குறிப்பு குறிப்பிடத்தக்கது. அதில் ஒரு பகுதி வருமாறு, இவர் வள்ளுவர் குடியிற் பிறந்தவர். இதனாலேயே இவர் வள்ளுவர் என வழங்கப்படுகிறார். வள்ளுவர்களுடைய சாதித்தொழில் அரசனுடைய ஆணையை யானை மூலம் பறை சாற்றி தெரிவிப்பதாகும். இக்குலத்தில் பிறந்த ஒருவருக்கு இவ்வளவு, கல்வியும், அறிவும் எவ்வாறு உண்டாகும் என்று பலர் ஐயப்பாடு கொண்டார்கள். அதனாலேயே வள்ளுவருடைய பிறப்பைக் குறித்துப் பல்வேறு கதைகளும் தோன்றின… தமிழ் ஆர்வம் கொண்டோருக்கு நல் விருந்து படைக்கும் நூல்.
—-
நம் மண் போற்றும் மாதரசிகள், வெ. இன்சுவை, கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 80ரூ.
இந்தியாவில் வாழ்ந்த புராண இதிகாச சரித்திர பெண்களான சீதாதேவி, கண்ணகி, காரைக்கால் அம்மையார், ஜான்சிராணி, டாக்டர் முத்துலட்சமி ரெட்டி உள்பட 18 பெண்களை பற்றிய பல அரிய தகவல்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 16/1/2014.