புத்தரின் போதனைகள் தீக நிகாயம்

புத்தரின் போதனைகள் தீக நிகாயம் (நீண்ட பேருரைகள் பாலி/ ஆங்கில மொழி நூல்களிலிருந்து), தமிழில்: போதிபால மகாதேரோ, திரிபிடக தமிழ் நிறுவனம், பக்.456, விலை ரூ.500. புத்தர் ஞானம் பெற்ற பின்பு 45 ஆண்டுகள் போதனைகள் செய்துள்ளார். அவை அவருடைய தாய்மொழியான பாலி மொழியில் பல நூறு ஆண்டுகளாகச் செவி வழியாக வழங்கப்பட்டன. போதனைகள் ‘திரிபிடகம்’ என அழைக்கப்பட்டன. கி.மு.77 ஆம் ஆண்டு இலங்கையை ஆண்ட வட்டகாமினி அபயன் என்ற மன்னன், நான்காவது பெளத்த சங்கத்தைக் கூட்டி, பாலி மொழியின் முழு திரிபிடகத்தை சிங்கள […]

Read more

மன்னனின் கௌரவம் சதுரங்க நடுவிலே

மன்னனின் கௌரவம் சதுரங்க நடுவிலே, வே.குமரவேல், முல்லை பதிப்பகம், பக். 136, விலை 100ரூ. திரைப்படப் பாடல் ஒன்றின் வரிகளை நுாலின் தலைப்பாகக் கொண்டிருக்கும் இந்நுால், அரசியல் சிந்தனைகளை அலசும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது. இன்றைய அரசியல் சூழலில் தக்கது எது, தகுதியானது எது என்பதை ஆழ்ந்த சிந்தனையோடு வெளிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். ‘மக்கள் எவ்வழி மன்னன் (தலைவர்கள்) அவ்வழி’ என்ற சிந்தனையே இன்று எண்ணத்தக்கதாய் உள்ளது என்ற கருத்தை முன்வைக்கும் ஆசிரியர், அரசியலில் எத்தகைய மாற்றம் வர வேண்டும் என்பதை இந்நுாலில் வலியுறுத்துகிறார். கடந்த தேர்தலில் […]

Read more

சிவபெருமானுடன் ஒரு திருநடனம்

சிவபெருமானுடன் ஒரு திருநடனம், சத்குரு சிவாய சுப்பிரமணிய சுவாமி எழுதிய Dance with siva, தமிழில் கே.என்.ஸ்ரீநிவாஸ், பக். 648, விலை 425ரூ. அமெரிக்க கலிபோர்னியாவில், 1927ல் பிறந்து, பாலே நடனக் கலைஞராய் பரிமளித்து, இந்து மத ஈடுபாட்டால், 1949ல் யாழ்ப்பாண ஞானியார், யோக சுவாமிகளால் சன்னியாச தீட்சை பெற்று, பிரதான பாடம் எனும் மூன்று தொகுப்புகளால் ஆங்கிலத்தில் வெளியான, நுாலின் முதல் பாகமான, ‘DANCING WITH SIVA’ தற்போது தமிழ் வடிவம் பெற்றுள்ளது. ‘மனம் முழுக்க காழ்ப்பினை சுமந்து செல்லும் தியான முயற்சிகளில் […]

Read more

ஆனைமலைக் காடர்கள்

ஆனைமலைக் காடர்கள், முனைவர் ஜே.ஆர்.லட்சுமி, மதன் மோனிகா பதிப்பகம், பக். 164, விலை 300ரூ. உலகில் மிகவும் தொன்மையானவர்கள் என்று கருதப்படும் ஆதிகுடியினர் இன்றும் காடுகளில் மலைவாழ் மக்களாகவே வசித்து வருகின்றனர். தமிழகத்தில் ஆனை மலையில் வாழும் காடர்கள் இன்றைய நாகரிகம் வளர்ந்த நிலையிலும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில், அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்கின்றனர். அவர்களின் வரலாறும் தொன்மையும் வாய்மொழிச் சான்றுகளாகவே உள்ளன. சுதந்திர இந்தியாவில், இன்னும் சுதந்திரம் அடையாதவர்களாக வாழும் காடர்களின் வாழ்க்கையை களஆய்வு செய்து உணர்வுபூர்வமாகப் படைக்கப்பட்ட நுால் இது. ஜவ்வாது […]

Read more

360 டிகிரி

360 டிகிரி, ஜி.கார்ல் மார்க்ஸ், எதிர் வெளியீடு, பக் 172, விலை 150ரூ. சமகால உணர்வுகளை பற்றிய தீவிர சிந்தனையை முன் வைக்கும்படியான பல கட்டுரைகள் இந்நுாலில் அடங்கியுள்ளன. நடப்பு அரசியல், சமூக பிரச்னை, இலக்கியம், இயக்கங்கள் ஆகியன பற்றிய கண்ணோட்டங்களை ஆழமான பார்வையில் வெளிப்படுத்தியிருக்கிறது. நடுநிலையாகவும், துணிவு மிக்க நெஞ்சுரத்தோடும் கட்டுரைகளைத் தார்மீகமான கருத்துக்களின் பின்னணியில் தன்னிலை நோக்கில் சொல்லிச் செல்கிறது இந்நுால். மாநில அரசியல் முதல், மத்திய அரசியல் வரையிலான அலசல் பார்வைகளைச் சித்திரித்து காட்டும்படியான இந்நுால், அண்மைக் காலத்திய நிகழ்வுகளின் […]

Read more

சிறுவர் கதைக் களஞ்சியம்

சிறுவர் கதைக் களஞ்சியம், இரா. காமராசு, சாகித்திய அகாடமி, பக். 240, விலை 160ரூ. கதை இலக்கியம் தமிழகத்திற்கு புதியதன்று. கதையும், கற்பனையும் மனித சமுதாயத்துடன் ஒன்றி வளர்ந்து வருவதாகும். பிள்ளைக்குச் சோறுாட்டும் தாய்மார்கள் தம் கட்டவிழ்ந்த கற்பனையால் புனைந்துரைக்கும் கதைகள் கணக்கற்றவை. பழந்தமிழகத்திலும் கதைகள் நிலவி வந்தன. தொல்காப்பியத்திலேயே உரைநடை வகைகள் பற்றி கூறும் தொல்காப்பியர், ‘பொருளோடு புணராப் பொய்ம் மொழி’ என்று குறிப்பிடுவது கற்பனைச் செறிவுடனான கதைகளையே ஆகும். சிறுகதைக்குரிய இலக்கணம் பற்றித் திறனாய்வாளர்கள் பலரும் விளக்கம் கூறியுள்ள போதும், இதுதான் […]

Read more

புயலிலே ஒரு தோணி

புயலிலே ஒரு தோணி, ஜி.அசோகன், விலை 40ரூ. ப. சிங்காரம் எழுதிய “புயலிலே ஒரு தோணி” தமிழின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்றென போற்றப்படுகிறது. குடும்ப நாவல். தீபாவளி சிறப்பிதழில் அந்நாவல் இடம் பெற்றுள்ளது. நன்றி: தினத்தந்தி, 1/11/2017.   —-   பொன்மொழிகள், முக்தா சீனிவாசன், திருக்குடந்தை பதிப்பகம், விலை 40ரூ. ராஜாஜி, பெரியார், கலைஞர் மு. கருணாநிதி ஆகியோருடைய பொன்மொழிகள் கொண்ட புத்தகம். தொகுத்தவர் முக்தா சீனிவாசன். நன்றி: தினத்தந்தி, 1/11/2017.

Read more

மகாகவியும் இசைப் பேரரசியும்

மகாகவியும் இசைப் பேரரசியும், முனைவர் மு. கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 500ரூ. இசையில் சிகரத்தைத் தொட்டு புகழின் உச்சத்தை அடைந்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. மகாகவி பாரதியார் பற்றியும், எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றியும் பேராசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் எழுதிய கட்டுரைகள் கொண்ட புத்தகம் இது. மொத்தம் 40 கட்டுரைகள், பாரதியார் பற்றியும், எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றியும் அறிந்து கொள்ள இந்த ஒரு புத்தகம் போதும். அந்த அளவுக்கு, அந்த இரு மேதைகளையும் படம் பிடித்துக் காட்டும் வகையில் கட்டுரைகள் அமைந்துள்ளன. நன்றி: தினத்தந்தி, 1/11/2017.

Read more

இதழியல் மேலாண்மை

  இதழியல் மேலாண்மை (சி.பா.ஆதித்தனார்), கவிஞர் சுரா, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், விலை 90ரூ. இதழியல் துறையில் பெரும் புரட்சியை உண்டாக்கியவர், “தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார்”. பாமரர்களையும் படிக்க வைத்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றையும், சாதனைகளையும் எழில்மிகு நடையில், சுவைபட எழுதியுள்ளார் முனைவர் கவிஞர் சுரா. இளம் பத்திரிகையாளர்களுக்கு ஒரு வழிகாட்டி என்று சொல்லத்தக்க வகையில் நூலை கவிஞர் சுரா உருவாக்கி இருப்பது பாராட்டுக்குரியது. ஆதித்தனார் நிறுவிய ‘தினத்தந்தி’, 75 ஆண்டுகள் வெற்றி நடை போட்டு, பவள விழா கொண்டாடும் நேரத்தில் இப்புத்தகம் […]

Read more

நாலேகால் டாலர்

நாலேகால் டாலர், ஜெயந்தி சங்கர், கிழக்கு பதிப்பகம், விலை 150ரூ. வாழ்க்கை போராட்டத்தை மையமாக கொண்டு எழுதப்பட்ட நூல். மனித உளவியலை, உளைச்சலை மிகத் திறமையாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 1/11/2017.

Read more
1 2 3 4 5 12