கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், நல்லாசிரியர் சு.குப்புசாமி, குமரன் பதிப்பகம், விலை 70ரூ. ஆங்கிலேயர்க்கு அஞ்சி இந்திய மக்கள் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்த நாளில், எவர்க்கும் அஞ்சாமல் கடலிலே சொந்தக் கலத்தினை ஓட்டிய வீரத் தமிழர் வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாறு. அவர் கப்பல் ஓட்டியதையும் செக்கிழுத்ததையும் மட்டுமே பாடமாகப் படித்தவர்களுக்கு ஆங்கிலேய அடக்குமுறையால் அவரும் அவரது குடும்பமும்பட்ட அத்தனை கஷ்டங்களையும் படம்பிடித்துக்காட்டியிருக்கிறது இந்த நூல். நன்றி: குமுதம், 11/10/2017.

Read more

எனது தென் ஆப்பிரிக்க பயண அனுபவங்கள்

எனது தென் ஆப்பிரிக்க பயண அனுபவங்கள், டாக்டர் கலைமாமணி யோகா, யோகா சாவித் பப்ளிகேஷன்ஸ், விலை 150ரூ. மகாத்மா காந்தியின் பாதம் பதிந்த பூமி, நெல்சன் மய்டேலா பிறந்த மண் என்று பெருமைகள் நிறைந்த தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுலா நோக்கில் சென்று, வரலாற்று நோக்கில் கண்டு, ஆவணமாகப் பதிவு செய்யும் நோக்கில் எழுதப்பட்ட நூல். ஆசிரியர் எடுக்கும் புகைப்படங்களைப் போலவே அவரது எழுத்துகளும் மிளர்கின்றன. நன்றி: குமுதம், 11/10/2017.

Read more

பறவைகள் பலவிதம்

பறவைகள் பலவிதம், மல்லை சத்யா, மல்லைத்தச்சன், விலை 50ரூ. பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் என்று சொன்னார்கள். இன்று விமானம் இருக்கிறது. பறவைகள் தொலைந்துவிட்டன. உலகில் 9672 பறவை இனங்கள் இருக்கின்றன என்பது முதல், அவற்றின் உடலமைப்பு, பறவைகள் பற்றிய அற்புதமான ஆச்சரியமான உண்மைகள். இதிஹாச புராணங்களில் இடம்பிடித்திருக்கும் பறவைகள் என்று முழுவதும் சுவாரஸ்யமான தொகுப்பு. நன்றி: குமுதம், 11/10/2017.

Read more

சங்க இலக்கியச் சாறு

சங்க இலக்கியச் சாறு, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 140ரூ. தொல்காப்பியம் எனும் இலக்கண நூல், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள், பாரதியார் பாட்டு என்று இலக்கிய நூல்கள் பலவற்றில் எவ்வாறு இடம்பிடித்து இலக்கிய அந்தஸ்தினைப் பெற்றிருக்கிறது என்பதை விளக்கியிருப்பதோடு, சங்க இலக்கிய நூல்கள் பலவற்றின் சாறுபோல் அவற்றின் நயத்தினையும் சொல்லியிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 11/10/2017.

Read more

பாயும் தமிழகம்

பாயும் தமிழகம், சுசீலா ரவிந்திரநாத், தமிழில் எஸ்.கிருஷ்ணன், கிழக்கு பதிப்பகம், விலை 400ரூ. தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தொழில் வளர்ச்சி பற்றி நுட்பமாகவும், ஆழமாகவும் விவரிக்கும் புத்தகம். டி.வி.எஸ். குழுமம், முருகப்பா குழுமம், இந்தியா சிமெண்ட், ஸ்ரீராம் குழுமம், சன்டிவி, அப்பல்லோ மருத்துவமனை முதலியவற்றின் வரலாற்றையும், சாதனைகளையும் சுசீலா ரவிந்திரநாத் ஆங்கிலத்தில் எழுதியதை, எஸ்.கிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அறிந்துகொள்ள விரும்புவோருக்கு மட்டும் அல்ல, புதிதாக தொழில் தொடங்கி சாதனை படைக்க விரும்புவோருக்கும் இது பயனுள்ள கையேடு. நன்றி: தினத்தந்தி, 27/9/2017.

Read more

திரும்ப வருமா என் குழந்தை மனது?

திரும்ப வருமா என் குழந்தை மனது?, நவுஷாத்கான், மணிமேகலைப் பிரசுரம், விலை 65ரூ. ரசிக்க வைக்கும் சின்னச் சின்ன கவிதைகள் கொண்ட புத்தகம். மாதிரிக்கு ஒன்று தமிழில் வல்லினம், மெல்லினம் இருந்தபோதும் இதயத்துக்கு அழகாய்த் தெரிவது என்னவோ உன் இடையினம்தான்! நன்றி: தினத்தந்தி, 27/9/2017.

Read more

புரட்சித் தலைவி ஜெ!ஜெ!,

புரட்சித் தலைவி ஜெ!ஜெ!, முனைவர் க.பன்னீர் செல்வம், அஸ்வின் பப்ளிகேஷன்ஸ், விலை 185ரூ. மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு அவருடைய இளமை பருவம், சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவர் பணியாற்றிய காலகட்டங்களில் அவர் செய்த சாதனைகள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. இறுதியாக அவர் மறைவு தொடர்பான செய்திகளை  “சங்கக் கரையில் தங்கம் புதைப்பு” கட்டுரையில் தெரிவித்துள்ளார். இதில் பல்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 27/9/2017.

Read more

நாலடியார் (திருக்குறளுடன் ஓர் ஒப்பிட்டுப்பார்வை)

நாலடியார் (திருக்குறளுடன் ஓர் ஒப்பிட்டுப்பார்வை), மானோஸ், ஹலோ பப்ளிகேஷன்ஸ், விலை 250ரூ. திருக்குறள், உலகின் தலைசிறந்த நீதிநூல், அதை அடுத்து சிறந்த நீதிகளை போதிக்கும் நூல் நாலடியார். இதில் அடங்கிய பாடல்கள், சமண முனிவர்களால் இயற்றப்பட்டவை. சில கருத்துக்களை திருக்குறள், நாலடியார் ஆகிய இரு நூல்களுமே வலியுறுத்துகின்றன. அதுபற்றி “யோகாசித்தர்” என்று புகழ் பெற்ற மானோஸ் ஆராய்ந்து அதுபற்றி இந்த நூலில் அழகாக எழுதியுள்ளார். திருக்குறள், நாலடியார் ஆகிய இரு நீதிநூல்களையும் ஒன்றாக படித்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் இந்நூல் தருகிறது. மானோஸ் முயற்சி பாராட்டுக்கு […]

Read more

இறைவன் எழுந்தருளும் இனிய கோவில்கள்

இறைவன் எழுந்தருளும் இனிய கோவில்கள், கவிஞர் சீனு.செந்தாமரை, செந்தமிழ் இலக்கிய பேரவை, விலை 100ரூ. தமிழகத்தின் சக்தி வாய்ந்த, பிரபல கோவில்களின் சிறப்பு பற்றி எளிய நடையில் எழுதியுள்ளார் நூலாசிரியர் கவிஞர் சீனு.செந்தாமரை. ஒவ்வொரு கோவில் பற்றியும் நறுக்கு தெறித்தாற்போல், நுணுக்கமான, அரிய தகவல்கள், கோவிலின் மூலவர் மற்றும் கோபுரங்கள் புகைப்படங்களுடன் தொகுக்கப்பட்டு உள்ளன. மாமரம், நெல்லி, மூங்கில் ஆகியவற்றை ஸ்தல விருட்சங்களாக கொண்ட அபூர்வ கோவில்கள் குறித்த தகவல்களை திரட்டி இருப்பது கோவில்களை உடனடியாக சென்று தரிசிக்கும் ஆர்வத்தை புத்தகத்தை படிப்போரிடம் ஏற்படுத்துகிறது. […]

Read more

ஓவியப் பேழை

ஓவியப் பேழை, சிவன் மலைப்பித்தன் நடராசன், அருள் வாக்கு சித்தர் சாமி சிவன் மலைப்பித்தன் அம்மணியம்மாள் வெளியீடு, விலை 1000ரூ. திருக்குறளுக்கு புதுவிதமாக உரை எழுதியிருக்கிறார், சிவன் மலைப்பித்தன் நடராசன். 1330 குறள்பாக்களுக்கு உரை எழுதியிருப்பதுடன், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் வரைபடங்களும் வைத்துள்ளார். படங்களில் இன்னும் சற்று மெருகேற்றி இருக்கலாம் என்றாலும், இது முதல் முயற்சி என்பதால் எல்லோரும் மனம் திறந்து பாராட்டலாம். நன்றி: தினத்தந்தி, 25/10/2017,

Read more
1 3 4 5 6 7 12