வரலாற்று நாயகன் எம்.ஜி.ஆர்.

வரலாற்று நாயகன் எம்.ஜி.ஆர்., முனைவர் க.பன்னீர் செல்வம், அஸ்வின் பப்ளிகேஷன்ஸ், பக். 304, விலை190ரூ. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை மானசீகத் தலைவராக வரித்துக் கொண்டுள்ள நுாலாசிரியர், ஏராளமான சுவாரஸ்யமான தகவல்களை திரட்டி, 44 தலைப்புகளில் எம்.ஜி.ஆரின் பிறப்பு முதல் இறுதிக்காலம் வரை அவரது வரலாற்றை எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆரின், 23 பக்க உயிலை கூட தேடிப்பிடித்து, ஒரு அத்தியாயத்தில் சேர்த்திருக்கிறார். எம்.ஜி.ஆர்., ரசிகர்களுக்கு ஒரு நல்விருந்து இந்நுால்! – கே.சி நன்றி: தினமலர், 26/11/2017.

Read more

புரட்சித் தலைவி ஜெ!ஜெ!,

புரட்சித் தலைவி ஜெ!ஜெ!, முனைவர் க.பன்னீர் செல்வம், அஸ்வின் பப்ளிகேஷன்ஸ், விலை 185ரூ. மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு அவருடைய இளமை பருவம், சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவர் பணியாற்றிய காலகட்டங்களில் அவர் செய்த சாதனைகள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. இறுதியாக அவர் மறைவு தொடர்பான செய்திகளை  “சங்கக் கரையில் தங்கம் புதைப்பு” கட்டுரையில் தெரிவித்துள்ளார். இதில் பல்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 27/9/2017.

Read more