பாரதிராஜாவின் திரைப்படங்கள் ஒரு பார்வை

பாரதிராஜாவின் திரைப்படங்கள் ஒரு பார்வை, அஸ்வின் பப்ளிகேஷன்ஸ், முனைவர் கமலம் சங்கர், விலை 110ரூ. தமிழ்த்திரை உலகில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர், இயக்குனர் இமயம் பாரதிராஜா. உண்மையா கிராமங்களையும், உண்மையான மனிதர்களையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினர். ஒவ்வொரு திரைப்படத்தையும் ஒரு இலக்கியமாக உருவாக்கினார். காலத்தால் அழிக்க முடியாதவை அவருடைய படங்கள். அது மட்டுமா? சாதாரண நடிகர்களுக்கு நடிப்பு கற்றுக்கொடுத்து, நட்சத்திரங்களாக ஜொலிக்க வைத்தார். உதவி டைரக்டர்களாக இருந்தவர்களை, டைரக்டர்களாக உயர வைத்தவர். தமிழ் சினிமாவின் அந்தஸ்த்தை உயர்த்தியவர்களில் பாரதிராஜாவுக்கு தனி […]

Read more

வரலாற்று நாயகன் எம்.ஜி.ஆர்.

வரலாற்று நாயகன் எம்.ஜி.ஆர்., முனைவர் க.பன்னீர் செல்வம், அஸ்வின் பப்ளிகேஷன்ஸ், பக். 304, விலை190ரூ. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை மானசீகத் தலைவராக வரித்துக் கொண்டுள்ள நுாலாசிரியர், ஏராளமான சுவாரஸ்யமான தகவல்களை திரட்டி, 44 தலைப்புகளில் எம்.ஜி.ஆரின் பிறப்பு முதல் இறுதிக்காலம் வரை அவரது வரலாற்றை எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆரின், 23 பக்க உயிலை கூட தேடிப்பிடித்து, ஒரு அத்தியாயத்தில் சேர்த்திருக்கிறார். எம்.ஜி.ஆர்., ரசிகர்களுக்கு ஒரு நல்விருந்து இந்நுால்! – கே.சி நன்றி: தினமலர், 26/11/2017.

Read more

புரட்சித் தலைவி ஜெ!ஜெ!,

புரட்சித் தலைவி ஜெ!ஜெ!, முனைவர் க.பன்னீர் செல்வம், அஸ்வின் பப்ளிகேஷன்ஸ், விலை 185ரூ. மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு அவருடைய இளமை பருவம், சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவர் பணியாற்றிய காலகட்டங்களில் அவர் செய்த சாதனைகள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. இறுதியாக அவர் மறைவு தொடர்பான செய்திகளை  “சங்கக் கரையில் தங்கம் புதைப்பு” கட்டுரையில் தெரிவித்துள்ளார். இதில் பல்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 27/9/2017.

Read more

வரலாற்று நாயகன் எம்.ஜி.ஆர்

வரலாற்று நாயகன் எம்.ஜி.ஆர்., முனைவர் க.பன்னீர்செல்வம், அஸ்வின் பப்ளிகேஷன்ஸ், விலை 190ரூ. ஒரு துணை நடிகராக சினிமா உலகில் அடியெடுத்து வைத்த எம்.ஜி.ஆர். கடும் உழைப்பினால் கதாநாயகனாக உயர்ந்தார். பின்னர் ‘வசூல் மன்னன்’ ஆனால். கலைஞருடன் ஏற்பட்ட மோதலால் தி.மு.க. வை விட்டு விலகி, அ.தி.மு.க.வை தொடங்கி, ஆட்சியைக் கைப்பற்றினார். 10 ஆண்டுகள் தமிழக முதல்- அமைச்சராக பதவி வகித்து, புகழின் உச்சியில் இருக்கும்போதே மறைந்தார். இது ஒரு புறம் இருக்க, துப்பாக்கியால் சுடப்பட்டு, யமனுடன் போராடி வெற்றி பெற்றார். ஏழை எளிய மக்களுக்கு உதவி, […]

Read more