இறைவன் எழுந்தருளும் இனிய கோவில்கள்

இறைவன் எழுந்தருளும் இனிய கோவில்கள், கவிஞர் சீனு.செந்தாமரை, செந்தமிழ் இலக்கிய பேரவை, விலை 100ரூ.

தமிழகத்தின் சக்தி வாய்ந்த, பிரபல கோவில்களின் சிறப்பு பற்றி எளிய நடையில் எழுதியுள்ளார் நூலாசிரியர் கவிஞர் சீனு.செந்தாமரை. ஒவ்வொரு கோவில் பற்றியும் நறுக்கு தெறித்தாற்போல், நுணுக்கமான, அரிய தகவல்கள், கோவிலின் மூலவர் மற்றும் கோபுரங்கள் புகைப்படங்களுடன் தொகுக்கப்பட்டு உள்ளன.

மாமரம், நெல்லி, மூங்கில் ஆகியவற்றை ஸ்தல விருட்சங்களாக கொண்ட அபூர்வ கோவில்கள் குறித்த தகவல்களை திரட்டி இருப்பது கோவில்களை உடனடியாக சென்று தரிசிக்கும் ஆர்வத்தை புத்தகத்தை படிப்போரிடம் ஏற்படுத்துகிறது.

முக்கிய நகரங்களில் இருந்து கோவில்கள் எவ்வளவு தொலைவில் அமைந்துள்ளது என்பதை குறிப்பிடப்பட்டு இருப்பது ஆன்மிக பயணம் மேற்கொள்வோருக்கு பயன்தரும்.

நன்றி: தினத்தந்தி, 27/9/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *