ராக்கெட் தாதா

ராக்கெட் தாதா, ஜி.கார்ல் மார்க்ஸ், எதிர்வெளியீடு, விலைரூ.190 படுகை முதலாகப் பதினொரு கதைகளின் தொகுப்பு நுால். புதுமாதிரியாக எழுதுவதற்கு எடுத்த முயற்சியாக அத்தனை கதைகளும் இடம்பெற்றுள்ளன. மொழிநடை நம்மை இருபதாம் நுாற்றாண்டின் தொடக்கத்திற்கு இழுத்துச் செல்வது போல் அமைந்துள்ள தன்மையைக் காணமுடிகிறது. பத்திரிகையின் தேவைக்காக எழுதப்பட்ட கதைகள் இவை இல்லை; என்றாலும் ஒரு வகையான தேடலை எதிர்பார்த்துஎழுதப்பட்டுள்ளது என்பதை இலக்கிய வாசகர்கள் எளிதில் உணர்ந்து கொள்வர். தமிழ்ச் சிறுகதையின் புதிய பரிமாணத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ள தொகுப்பு நுால். – முகிலை ராசபாண்டியன் நன்றி: […]

Read more

விலகி நடக்கும் சொற்கள்

விலகி நடக்கும் சொற்கள், ஜி.கார்ல் மார்க்ஸ், எதிர் வெளியீடு, பக்.160, விலை175ரூ. சிந்தையள்ளும் கட்டுரைகள்! ‘அம்மாக்களும், அடையாளச் சிக்கலும்!’ என்ற முதல் கட்டுரையில் ஆசிரியர் சொல்வார்; ‘குழந்தைகள் அழகானவை. பூக்களை போன்றவை. எல்லா உயரிய விஷயங்களைப் போல அவையும் தீவிர கவனத்தைக் கோருபவை. ‘அந்தப் பராமரிப்பின் சுமையை ஏற்க ஆழ்ந்த காதலும், பொறுமையும், புரிந்துணர்வும் வேண்டும். அதற்கு தயாரில்லை எனில் நிகழும் வன்முறைகளைத் தடுக்கவே முடியாது!’ தமிழ் சினிமா: கோடுகளை அழிக்கும் ரப்பர்! என்ற கட்டுரையில் பேசுவார்; ‘‘பொறுக்கித்தனத்தில் ஒரு தீவிர எம்.ஜி.ஆர்., ரசிகனும், […]

Read more

ராக்கெட் தாதா

ராக்கெட் தாதா, ஜி.கார்ல் மார்க்ஸ், எதிர் வெளியீடு, விலை 190ரூ. பாவனையற்ற கதைகள் ஜி.கார்ல் மார்க்ஸின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ‘ராக்கெட் தாதா’விலுள்ள கதைகளை, சிறுநகரம் சார்ந்த மத்திய வர்க்கத்தின் உணர்வுத் தருணங்களை மையப்படுத்தும் கதைகளாக அடையாளப்படுத்தலாம். கார்ல் மார்க்ஸ் தான் கையாளும் வாழ்க்கையைப் பாவனையின்றி அணுகுகிறார். இந்தக் கதைகள் சமூக நிகழ்வுகளுக்குப் புதிய அர்த்தங்களை கொடுக்கக்கூடியவை அல்ல; மாறாக, அந்நிகழ்வுகளின் உணர்வுப் பரிமாணங்களை மீள்உருவாக்கம் செய்வதாக அமைகிறது. தலைப்புக் கதையான ‘ராக்கெட் தாதா’ முஸ்லிம்களின் வாழ்க்கை முறை பற்றி எழுதப்பட்ட கதைகளில் சிறந்த […]

Read more

360 டிகிரி

360 டிகிரி, ஜி.கார்ல் மார்க்ஸ், எதிர் வெளியீடு, பக் 172, விலை 150ரூ. சமகால உணர்வுகளை பற்றிய தீவிர சிந்தனையை முன் வைக்கும்படியான பல கட்டுரைகள் இந்நுாலில் அடங்கியுள்ளன. நடப்பு அரசியல், சமூக பிரச்னை, இலக்கியம், இயக்கங்கள் ஆகியன பற்றிய கண்ணோட்டங்களை ஆழமான பார்வையில் வெளிப்படுத்தியிருக்கிறது. நடுநிலையாகவும், துணிவு மிக்க நெஞ்சுரத்தோடும் கட்டுரைகளைத் தார்மீகமான கருத்துக்களின் பின்னணியில் தன்னிலை நோக்கில் சொல்லிச் செல்கிறது இந்நுால். மாநில அரசியல் முதல், மத்திய அரசியல் வரையிலான அலசல் பார்வைகளைச் சித்திரித்து காட்டும்படியான இந்நுால், அண்மைக் காலத்திய நிகழ்வுகளின் […]

Read more