ராக்கெட் தாதா

ராக்கெட் தாதா, ஜி.கார்ல் மார்க்ஸ், எதிர்வெளியீடு, விலைரூ.190 படுகை முதலாகப் பதினொரு கதைகளின் தொகுப்பு நுால். புதுமாதிரியாக எழுதுவதற்கு எடுத்த முயற்சியாக அத்தனை கதைகளும் இடம்பெற்றுள்ளன. மொழிநடை நம்மை இருபதாம் நுாற்றாண்டின் தொடக்கத்திற்கு இழுத்துச் செல்வது போல் அமைந்துள்ள தன்மையைக் காணமுடிகிறது. பத்திரிகையின் தேவைக்காக எழுதப்பட்ட கதைகள் இவை இல்லை; என்றாலும் ஒரு வகையான தேடலை எதிர்பார்த்துஎழுதப்பட்டுள்ளது என்பதை இலக்கிய வாசகர்கள் எளிதில் உணர்ந்து கொள்வர். தமிழ்ச் சிறுகதையின் புதிய பரிமாணத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ள தொகுப்பு நுால். – முகிலை ராசபாண்டியன் நன்றி: […]

Read more

ராக்கெட் தாதா

ராக்கெட் தாதா, ஜி.கார்ல் மார்க்ஸ், எதிர் வெளியீடு, விலை 190ரூ. பாவனையற்ற கதைகள் ஜி.கார்ல் மார்க்ஸின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ‘ராக்கெட் தாதா’விலுள்ள கதைகளை, சிறுநகரம் சார்ந்த மத்திய வர்க்கத்தின் உணர்வுத் தருணங்களை மையப்படுத்தும் கதைகளாக அடையாளப்படுத்தலாம். கார்ல் மார்க்ஸ் தான் கையாளும் வாழ்க்கையைப் பாவனையின்றி அணுகுகிறார். இந்தக் கதைகள் சமூக நிகழ்வுகளுக்குப் புதிய அர்த்தங்களை கொடுக்கக்கூடியவை அல்ல; மாறாக, அந்நிகழ்வுகளின் உணர்வுப் பரிமாணங்களை மீள்உருவாக்கம் செய்வதாக அமைகிறது. தலைப்புக் கதையான ‘ராக்கெட் தாதா’ முஸ்லிம்களின் வாழ்க்கை முறை பற்றி எழுதப்பட்ட கதைகளில் சிறந்த […]

Read more