ராக்கெட் தாதா

ராக்கெட் தாதா, ஜி.கார்ல் மார்க்ஸ், எதிர்வெளியீடு, விலைரூ.190 படுகை முதலாகப் பதினொரு கதைகளின் தொகுப்பு நுால். புதுமாதிரியாக எழுதுவதற்கு எடுத்த முயற்சியாக அத்தனை கதைகளும் இடம்பெற்றுள்ளன. மொழிநடை நம்மை இருபதாம் நுாற்றாண்டின் தொடக்கத்திற்கு இழுத்துச் செல்வது போல் அமைந்துள்ள தன்மையைக் காணமுடிகிறது. பத்திரிகையின் தேவைக்காக எழுதப்பட்ட கதைகள் இவை இல்லை; என்றாலும் ஒரு வகையான தேடலை எதிர்பார்த்துஎழுதப்பட்டுள்ளது என்பதை இலக்கிய வாசகர்கள் எளிதில் உணர்ந்து கொள்வர். தமிழ்ச் சிறுகதையின் புதிய பரிமாணத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ள தொகுப்பு நுால். – முகிலை ராசபாண்டியன் நன்றி: […]

Read more

பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்

பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், எதிர்வெளியீடு, பக். 896, விலை 950ரூ. தமிழ்ப் பெருமை ஆய்வில் செழுமை தமிழ்நாட்டு வரலாற்றைப் பற்றி, தமிழில் படிக்கும் போதெல்லாம், மேலை மொழிகளில் இருக்குமளவுக்குத் தற்போதைய தமிழ் ஆய்வாளர்கள் ஆழமாகப் பரிசிலித்து எழுதுவதில்லை, என்ற என்னுள் இருந்த ஏக்கம் இந்நூலின் முதல் பார்வையிலேயே மறைந்து விட்டது. கணியன் பாலன் ஆய்வின் வீச்சும், பரிமாண வியாபகமும் ஆச்சரியப்பட வைக்கிறது. ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள நூல், கால, பொருள் ரீதியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ள முறையால் ஒரு தனிச்சிறப்பைப் பெறுகிறது. இம்முறையால் இந்நூல் […]

Read more

சுற்றுச்சூழலியல் உலகம் தழுவிய வரலாறு

சுற்றுச்சூழலியல் உலகம் தழுவிய வரலாறு, ராமச்சந்திர குஹா, எதிர்வெளியீடு, விலை 250ரூ. சுற்றுப் பயணங்கள், ஆய்வேடுகளின் அடிப்படையில் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா எழுதிய நூலின் தமிழாக்கம் இது. சுற்றுச்சூழல் பாதிப்பு, அரசுத் திட்டங்காளல் தமது நிலங்களை இழக்கும் பழங்குடியினர், விவசாயிகளின் நிலை என்று பல பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறார் குஹா. நன்றி: தி இந்து, 28/5/2016.   —- ஏ.கே. செட்டியார் படைப்புகள், அறியப்படாத அரிய கட்டுரைகளின் முழுத் தொகுதி, சந்தியா பதிப்பகம், விலை 900ரூ. ஏ.கே. செட்டியாரின் படைப்புகள் முழுவதுமாகத் தொகுக்கப்பட்டு இரு […]

Read more

மதங்களும் சில விவாதங்களும்

மதங்களும் சில விவாதங்களும், தருமி, எதிர்வெளியீடு, பக். 240, விலை 220ரூ. மதங்கள், நம்பிக்கை அடிப்படையிலானவை. நம்பிக்கை என்பது காரண, காரியத்திற்கு அப்பாற்பட்டது. அதனாலேயே அங்கு கேள்விக்கோ, தர்க்க ரீதியிலான சிந்தனைக்கோ இடமில்லை. விளைவு மதநம்பிக்கை கேள்விக்கு அப்பாற்பட்டதாக போய்விடுகிறது. நூலாசிரியர் பிறப்பால் கிறிஸ்தவர். அந்த மத நம்பிக்கையில் 43 வயது வரை ஆழ்ந்து சென்ற அவர், தர்க்கரீதியாக தன் மனதில் எழுந்த கேள்விகளுக்கு விடை தேடத் துவங்கி, பின் நாத்திகரானார். தன் அனுபவத்தை இந்த நூலில் மிக அழகாக விவரித்திருக்கிறார். அவரது அனுபவத்தோடு […]

Read more

பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்

பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், எதிர்வெளியீடு, பக். 895, விலை 950ரூ. நூலாசிரியர் பொறியாளர். அதனால், கணிதவியல் முறை சார்ந்த ஆய்வு மரபை முன்னெடுத்து, சங்கப் பிரதிகளை ஆய்வு செய்துள்ளார். இதற்கென அவர் மேற்கொண்ட உழைப்பு மலைக்கச் செய்கிறது என முன்னுரையில் பேராசிரியர் வீ. அரசு கூறுகிறார். சிவராஜப் பிள்ளை, கமில் சுவலபில் ஆகியோரை அடுத்து, தனக்கென தனி முறையியலை உருவாக்கிக் கொண்டு, அதன் அடிப்படையில், தமிழக வரலாற்றை கணியன் பாலன் ஆய்ந்துள்ளதாக, வீ. அரசு தெரிவிக்கிறார். நூலாசிரியர், சங்க இலக்கியத்தை கூர்ந்து […]

Read more

காடுகளுக்காக ஒரு போராட்டம்

காடுகளுக்காக ஒரு போராட்டம், சிக்கோ மென்டிஸ், தமிழில் ச. வின்சென்ட், எதிர்வெளியீடு, விலை 120ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023826.html இறுதி சடங்கிற்கு பூக்கள் வேண்டாம். பிரேசிலை சேர்ந்த, சிக்கோ மென்டிஸ் ஆங்கிலத்தில் எழுதி, பேராசிரியர் ச.வின்சென்ட், ‘காடுகளுக்காக ஒரு போராட்டம்’ என, தமிழில் மொழிபெயர்த்த நூலை சமீபத்தில் படித்தேன். எதிர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இயற்கையை அழிப்போருக்கு, அரசு நிர்வாகம் துணை நிற்பதும், எதிர்ப்பவர்களை கொல்வதும் என்ற உண்மை சம்பவத்தை நூல் விவரிக்கிறது. இயற்கையை காப்பாற்ற போராடி கொல்லப்படும், சிக்கோ […]

Read more

காலத்தை வென்ற காவிய நட்பு

காலத்தை வென்ற காவிய நட்பு, பழ. நெடுமாறன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 800ரூ. ஆசிரியர் பழ. நெடுமாறனின் கடும் முயற்சியாலும் அர்ப்பணிப்பாலும் இந்த புத்தகம் உருவாகி இருப்பதை நன்றாக உணரமுடிகிறது. இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் ஆதிகாலத்தில் இருந்து வரும் நட்பும் இரு நாடுகள் இடையே ஏற்பட்ட பண்பாட்டு பரிமாற்றமும் மிக நுணுக்கமாக இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்கு ரஷியா செய்த உதவிகள், ரஷியாவில் நடைபெற்ற புரட்சி இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம், இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே இருந்த ஆழ்ந்த […]

Read more

யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது

யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது, எர்னெஸ்ட் ஹெமிங்வே, தமிழில் சி.சீனிவாசன், எதிர்வெளியீடு, பொள்ளாச்சி, பக். 760, விலை 550ரூ. இலக்கியத்துக்கான நோபல் பரிசை தனது ‘கடலும் கிழவனும்’ நாவலுக்காகப் பெற்றவர் எர்னெட் ஹெமிங்கே. அவருடைய குறிப்பிடத்தக்க இன்னொரு நாவல் இது. 1936 – 1939 இல் ஸ்பானிஷில் நடந்த உள்நாட்டுப் போரை மையமாகக் கொண்டு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. போர் நிகழும் காலத்தில் ஆண்களும், பெண்களும் சிந்திக்கும் முறை, நடந்துகொள்ளும் முறை ஆகியவை மிக இயல்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் வெடி மருந்து நிபுணர் ராபர்ட் ஜோர்டான் […]

Read more