பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்
பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், எதிர் வெளியீடு, பக். 896, விலை 950ரூ. ஆதித் தமிழர்களின் வாழ்வியலையும், கலாசாரத்தையும், அரசாட்சியையும் விளக்கிக் கூறும் ஆவணப் பதிவாக இந்நூல் வெளிவந்துள்ளது. பொதுவாக சங்க இலக்கியங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள் ஆகிய ஆதாரங்களின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதுண்டு. இந்நூலாசிரியர், இவற்றுடன் கூட வெளிநாட்டு அறிஞர்களின் குறிப்புகளின் பார்வையிலும் பழந்தமிழனின் வாழ்வை அணுகியிருக்கிறார். கிமு 500-ஆம் ஆண்டு காலங்களில் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரைகள் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததும், அந்த அளவுக்கு வர்த்தகத்தில் தலைசிறந்தவர்களாக நாம் விளங்கியதும் […]
Read more