மதங்களும் சில விவாதங்களும்

மதங்களும் சில விவாதங்களும், தருமி, எதிர்வெளியீடு, பக். 240, விலை 220ரூ.

மதங்கள், நம்பிக்கை அடிப்படையிலானவை. நம்பிக்கை என்பது காரண, காரியத்திற்கு அப்பாற்பட்டது. அதனாலேயே அங்கு கேள்விக்கோ, தர்க்க ரீதியிலான சிந்தனைக்கோ இடமில்லை. விளைவு மதநம்பிக்கை கேள்விக்கு அப்பாற்பட்டதாக போய்விடுகிறது.

நூலாசிரியர் பிறப்பால் கிறிஸ்தவர். அந்த மத நம்பிக்கையில் 43 வயது வரை ஆழ்ந்து சென்ற அவர், தர்க்கரீதியாக தன் மனதில் எழுந்த கேள்விகளுக்கு விடை தேடத் துவங்கி, பின் நாத்திகரானார்.

தன் அனுபவத்தை இந்த நூலில் மிக அழகாக விவரித்திருக்கிறார். அவரது அனுபவத்தோடு மூன்று தனி நபர்களின் கட்டுரைகளும் நூலில் இடம் பெற்றுள்ளன.

நன்றி: தினமலர், 9/6/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *