யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது
யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது, எர்னெஸ்ட் ஹெமிங்வே, தமிழில் சி.சீனிவாசன், எதிர்வெளியீடு, பொள்ளாச்சி, பக். 760, விலை 550ரூ.
இலக்கியத்துக்கான நோபல் பரிசை தனது ‘கடலும் கிழவனும்’ நாவலுக்காகப் பெற்றவர் எர்னெட் ஹெமிங்கே. அவருடைய குறிப்பிடத்தக்க இன்னொரு நாவல் இது. 1936 – 1939 இல் ஸ்பானிஷில் நடந்த உள்நாட்டுப் போரை மையமாகக் கொண்டு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. போர் நிகழும் காலத்தில் ஆண்களும், பெண்களும் சிந்திக்கும் முறை, நடந்துகொள்ளும் முறை ஆகியவை மிக இயல்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் வெடி மருந்து நிபுணர் ராபர்ட் ஜோர்டான் சிறு கெரில்லாப் படையுடன் வரப்போகும் தாக்குதலைச் சமாளிக்க எதிரிகளின் எல்லைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். போர்க்களத்தின் அன்பு, காதல், சோகம், கூரம் ஆகியவை நாவலை சுவாரஸ்யமாக்குகின்றன. போரின்போது அதைத் தவிர வேறு எதையும் சிந்திக்ககூடாது என்று நினைக்கும் ராபர்ட் ஜோர்டான், அதற்கு மாறாக ஒரு பெண்ணுடன் காதல் வயப்படுவது சுவையாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. கெரில்லாப் படையின் தலைவனின் மனைவி, அழகற்றவள் எனினும் புத்திசாலித்தனமான அவளுடைய செயல்களால் நாவலுடன் நாம் ஒன்றிப் போக முடிகிறது. போரின் கொடுமையை நாவல் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது. நன்றி: தினமணி, 16/3/2015.