காலத்தை வென்ற காவிய நட்பு
காலத்தை வென்ற காவிய நட்பு, பழ. நெடுமாறன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 800ரூ.
ஆசிரியர் பழ. நெடுமாறனின் கடும் முயற்சியாலும் அர்ப்பணிப்பாலும் இந்த புத்தகம் உருவாகி இருப்பதை நன்றாக உணரமுடிகிறது. இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் ஆதிகாலத்தில் இருந்து வரும் நட்பும் இரு நாடுகள் இடையே ஏற்பட்ட பண்பாட்டு பரிமாற்றமும் மிக நுணுக்கமாக இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்கு ரஷியா செய்த உதவிகள், ரஷியாவில் நடைபெற்ற புரட்சி இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம், இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே இருந்த ஆழ்ந்த நட்பு போன்றவை பற்றிய வியக்கத்தக்க பல தகவல்கள் ஆதாரங்களுடன் தரப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் கோர்வைப்படுத்தி கொடுத்து இருக்கும் நேர்த்தியால், விறுவிறுப்பு குறையாமல் படிக்க முடிகிறது. இந்திய – ரஷிய உறவு பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள உதவும் ஆவணமாக இந்த நூல் திகழும். நன்றி: தினத்தந்தி, 25/2/2015.
—-
மறுபடியும், கனகராஜன், எதிர்வெளியீடு, பொள்ளாச்சி, விலை 70ரூ.
அன்றாட வாழ்வியல் சம்பவங்களை கதைக்களமாக கொண்டு நூலாசிரியர் கனகராஜன் எழுதியிருக்கும் 13 சிறுகதைகளின் தொகுப்பு நூல். நன்றி: தினத்தந்தி, 25/2/2015.