அன்பு நபியின் அமுத வாக்குகள்
அன்பு நபியின் அமுத வாக்குகள், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், சென்னை, விலை 240ரூ.
‘திண்ணமாக நற்குணத்தின் மிக உன்னதமான நிலையில் நீர் இருக்கின்றீர்’ என்று திருமறை திருக்குர்ஆன் வசனத்திற்கு ஏற்ப நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நற்பண்புகளின் தாயகமாகத் திகழ்ந்தார்கள். அவர்களின் பொன் மொழிகளை, மொழிகின்ற நூல்கள் ஏராளம். இஸ்லாமிய அறிஞர் மவுலானா முகம்மத் பாரூக் கான், நபி மொழிகளைத் தொகுத்து ‘கலாமெ நுபுவ்வத் என்ற பெயரில் அரபி மொழியில் ஆறு தொகுதிகளாக அளித்துள்ளார். அதில் ‘ஒழுக்கவியல்’ குறித்த பொன்மொழிகள் முதல் தொகுதியாக வெளிவந்துள்ளது. இதைத் தமிழில் டி. அஜீஸ்லுத்புல்லாஹ் மொழிபெயர்த்துள்ளார். நபிகளாரின் அமுத வாக்குகளில் ஒழுக்கவியல் போதனைகளை மட்டும் தனியாகத் தொகுத்து அளித்திருப்பது இந்த நூலின் தனிச் சிறப்பாகும். பெருமானாரின் பொன்மொழிகளுக்கு இதயத்தைத் தொடும் வகையில் அழகான, கருத்தாழம் மிக்க விளக்கங்களை ஆசிரியர் சொல்கிறார். அதன் மூலம் நன்னடத்தையின் பக்கம் கரம் பிடித்து நம்மை அழைத்துச் சென்றார். நன்றி: தினத்தந்தி, 25/2/2015.
—-
முப்பருவம், எஸ்.ஏ. வேணிற்செல்வன், சாரதி பதிப்பகம், சென்னை, விலை 150ரூ.
கிராம மக்கள் வாழும் முறையை அழகாக இந்த நாவலில் படம்பிடித்துக் காட்டியதுடன், “மனிதனுக்கு கெருவம் அதிகமாப் போச்சி, அதான் பருவமே மாறிப்போச்சி” என்ற வரிகள் படிப்பவர்களை கொள்ளை கொள்கிறது. நன்றி: தினத்தந்தி, 25/2/2015.