அன்பு நபியின் அமுத வாக்குகள்

அன்பு நபியின் அமுத வாக்குகள், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், சென்னை, விலை 240ரூ. ‘திண்ணமாக நற்குணத்தின் மிக உன்னதமான நிலையில் நீர் இருக்கின்றீர்’ என்று திருமறை திருக்குர்ஆன் வசனத்திற்கு ஏற்ப நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நற்பண்புகளின் தாயகமாகத் திகழ்ந்தார்கள். அவர்களின் பொன் மொழிகளை, மொழிகின்ற நூல்கள் ஏராளம். இஸ்லாமிய அறிஞர் மவுலானா முகம்மத் பாரூக் கான், நபி மொழிகளைத் தொகுத்து ‘கலாமெ நுபுவ்வத் என்ற பெயரில் அரபி மொழியில் ஆறு தொகுதிகளாக அளித்துள்ளார். அதில் ‘ஒழுக்கவியல்’ குறித்த பொன்மொழிகள் முதல் தொகுதியாக வெளிவந்துள்ளது. […]

Read more

முப்பருவம்

முப்பருவம், எஸ்.ஏ.வேணிற்செல்வன், சாரதி பதிப்பகம், பக். 336, விலை 150ரூ. பேதைப் பருவம், பெதும்பைப் பருவம், மங்கைப் பருவம் எனும் முப்பருவம், இந்தப் புதினம். இன்றைய விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்து, கிராமத்து மண்ணும், குழந்தைகள் போன்ற அந்த மக்களின் வாழ்க்கையும் நன்றாகப் பதிவாகி இருக்கின்றன. அந்தக்கால குழந்தை திருமணம், எப்படி விமரிசையாக நடக்கும் என்பதையும், ஆசிரியர் நன்றாகப் படம் பிடித்துக்காட்டுகிறார். முருகையன், வள்ளியம்மாள், சுந்தரம், லட்சுமி இளவரசு, மங்கையர்க்கரசி பாத்திரப் படைப்புகள் அருமை. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் முறை, கிராமத்திலே பல்துலக்க, […]

Read more

சூரிய உதடுகள்

சூரிய உதடுகள், சுசி. நடராஜன், சாரதி பதிப்பகம், 107/6, ரிச்சித் தெரு, சித்தாதிரிப் பேட்டை, சென்னை2, பக். 96, விலை 45ரூ. கவிதையின் ஆழம் கவிஞன் எடுத்தாளும் வார்த்தைகளில்தான் உள்ளது. மனிதம், இயற்கை, சமூகம், காதல், போட்டி, பொறாமை, சுதந்திரம் எதுவாக இருந்தாலும் சுசி. நடராஜனின் வார்த்தைகளில் ஓர் உயிர்ப்பு பெற்றுவிடுகிறது. இரட்டை மாடு வாழ்க்கை வண்டி பூட்டிய பிறகு பாரம் சுமக்க பயப்படும் மிரட்சி வாழ்க்கைப் பயணத்தில் எழும் மிரட்சியை ஆசிரியர் தொட்டுச் செல்லும் பாங்கில் ஒரு பெருமூச்சு எழுகிறது. வாழ்க்கையின் எச்சரிக்கை […]

Read more