முப்பருவம்

முப்பருவம், எஸ்.ஏ.வேணிற்செல்வன், சாரதி பதிப்பகம், பக். 336, விலை 150ரூ.

பேதைப் பருவம், பெதும்பைப் பருவம், மங்கைப் பருவம் எனும் முப்பருவம், இந்தப் புதினம். இன்றைய விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்து, கிராமத்து மண்ணும், குழந்தைகள் போன்ற அந்த மக்களின் வாழ்க்கையும் நன்றாகப் பதிவாகி இருக்கின்றன. அந்தக்கால குழந்தை திருமணம், எப்படி விமரிசையாக நடக்கும் என்பதையும், ஆசிரியர் நன்றாகப் படம் பிடித்துக்காட்டுகிறார். முருகையன், வள்ளியம்மாள், சுந்தரம், லட்சுமி இளவரசு, மங்கையர்க்கரசி பாத்திரப் படைப்புகள் அருமை. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் முறை, கிராமத்திலே பல்துலக்க, உண்ண, உடுக்க ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக எதயும் தேடிக்கொண்டிருக்காமல், கிடைத்ததை பய்னபடுத்தி, கிடைக்காததற்கு ஏங்காமல் இயற்கையாக வாழும் இயல்பு முதலிய யதார்த்தங்களை அழகாகச் சித்திரிக்கிறார். அந்தக் கால தலைமுறையைம், இந்தக் கால நடைமுறையையும் ஒப்பிட்டு நோக்கும் நாவல். -எஸ். குரு. நன்றி: தினமலர், 23/11/2014.  

—-

டாக்டர் ஜோக்ஸ், ஆர். விக்னேஷ், கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, விலை 30ரூ.

நகைச்சுவை துணுக்குகள் கொண்ட சில புத்தகங்களைப் படிக்கும்போது சிரிப்பை அடக்க முடியாது. அத்தகைய வயிற்றுவலி ஏற்படக்கூடிய அளவுக்கு சிரிக்க வைக்கும் புத்தகம் இது. நன்றி: தினத்தந்தி. 12/11/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *