தெய்வத்தமிழ்
தெய்வத்தமிழ், பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.
உலகத்தை வெறுப்பது ஆன்மிகம் அல்ல, உலகத்தை அறிந்துகொண்டு, அதற்குள் வாழ்ந்து, தங்களையும், உலகத்தையும், ஒருசேர வளர்த்துக் கொள்வதே ஆன்மிகம் என்ற குன்றக்குடி அடிகளாரின் கருத்தியலின் ஒளியில் ஆன்மாவின் – உயிரின் – தரத்தை மேம்படுத்தும் கட்டுரைகள் இந்நூலில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. இக்காலத்திலே மனிதன் மன அழுத்தத்திலும், கவலையிலும் சிக்கித் தவிக்கிறான். புற வளர்ச்சியில் இமாலய உச்சியைத் தொட்டிருந்தாலும், அக உலகில் மயக்கத்திலும், கலக்கத்திலும், குழப்பத்திலும், நடுக்கத்திலும் அகப்பட்டு, அல்லற்பட்டு, ஆற்றாது, அழுது புலம்புகிறான். இச்சூழலில் ஆன்மிகமே அவனுக்குக் கைகொடுக்கும். மனதிற்கு ஆறுதல் தரும் அருமருந்தாக விளங்கும் என்பதை பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குகிறார் பேராசிரியர் இரா. மோகன். நன்றி: தினத்தந்தி, 25/2/2015.
—-
மனமென ஒன்று உண்டா?, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 50ரூ.
மனிதனுக்கு உண்மையில் மனம் உண்டா? என்பதை அறிவியல் அடிப்படையில் ஆராயும் நூல். இது சிறிய நூலானாலும் ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கிய அரிய பெட்டகமாக ஆக்கியுள்ளார் புலவர் பா. வீரமணி. நன்றி: தினத்தந்தி, 25/2/2015.