தெய்வத்தமிழ்

தெய்வத்தமிழ், மரு. பரமரு, பழனியப்பா பிரதர்ஸ், பக். 184, விலை 145ரூ. தேவாரம் அருளிய சமயக் குரவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரைப் பற்றியும், சைவ புராணங்களில் சிறப்பாகப் போற்றிப் புகழப்படும் பெரிய புராணம், கந்தபுராணம், திருவிளையாடற்புராணம் ஆகிய படைப்புகளில் இறைவனின் திருவருள் பற்றியும், மகாகவி பாரதியாரின் தெய்வப் பாடல்கள், அன்னை காரைக்கால் அம்மையார் பற்றியும் அழகுற ‘தெய்வத் தமிழ்’ என்னும் இந்த நூல் எடுத்துரைத்துள்ளது. கட்டுரை வடிவில் சமய ஆர்வலர்களும், தமிழ் இலக்கிய ஆர்வலர்களும் படித்துணரும் வகையில் அமையப் பெற்ற இந்த நூலில், […]

Read more

தெய்வத்தமிழ்

தெய்வத்தமிழ், பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. உலகத்தை வெறுப்பது ஆன்மிகம் அல்ல, உலகத்தை அறிந்துகொண்டு, அதற்குள் வாழ்ந்து, தங்களையும், உலகத்தையும், ஒருசேர வளர்த்துக் கொள்வதே ஆன்மிகம் என்ற குன்றக்குடி அடிகளாரின் கருத்தியலின் ஒளியில் ஆன்மாவின் – உயிரின் – தரத்தை மேம்படுத்தும் கட்டுரைகள் இந்நூலில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. இக்காலத்திலே மனிதன் மன அழுத்தத்திலும், கவலையிலும் சிக்கித் தவிக்கிறான். புற வளர்ச்சியில் இமாலய உச்சியைத் தொட்டிருந்தாலும், அக உலகில் மயக்கத்திலும், கலக்கத்திலும், குழப்பத்திலும், நடுக்கத்திலும் அகப்பட்டு, அல்லற்பட்டு, ஆற்றாது, அழுது புலம்புகிறான். […]

Read more