தெய்வத்தமிழ்
தெய்வத்தமிழ், பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. உலகத்தை வெறுப்பது ஆன்மிகம் அல்ல, உலகத்தை அறிந்துகொண்டு, அதற்குள் வாழ்ந்து, தங்களையும், உலகத்தையும், ஒருசேர வளர்த்துக் கொள்வதே ஆன்மிகம் என்ற குன்றக்குடி அடிகளாரின் கருத்தியலின் ஒளியில் ஆன்மாவின் – உயிரின் – தரத்தை மேம்படுத்தும் கட்டுரைகள் இந்நூலில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. இக்காலத்திலே மனிதன் மன அழுத்தத்திலும், கவலையிலும் சிக்கித் தவிக்கிறான். புற வளர்ச்சியில் இமாலய உச்சியைத் தொட்டிருந்தாலும், அக உலகில் மயக்கத்திலும், கலக்கத்திலும், குழப்பத்திலும், நடுக்கத்திலும் அகப்பட்டு, அல்லற்பட்டு, ஆற்றாது, அழுது புலம்புகிறான். […]
Read more