கவியமுதம்
கவியமுதம், கவிஞர் இரா. இரவி, வானதி பதிப்பகம், சென்னை, பக். 172, விலை 100ரூ.
கவிஞர் இரா. இரவியின் கவிதைகள் ஒவ்வொன்றிலிருந்தும் தமிழின்-தமிழனின் உயிர்த் துடிப்பு கேட்கிறது. சமூக அவலங்களை எதிர்க்கும் ஒரு கலகக்குரல் கேட்கிறது. மொழியின் ஆன்மா தெரிகிறது. முற்போக்குச் சிந்தனையின் முகவரி தெரிகிறது. சமரசம் செய்து கொள்ளாத கொள்கை தெரிகிறது. காமராசரையும் பெரியாரையும் பாரதிதாசனையும் இன்னும் பல அறிஞர்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் உழைப்பு தெரிகிறது. எதிர்காலம் குறித்த நம்பிக்கை விதையை விதைக்கும்போக்கு தெரிகிறது. காதலின் வலிமையும் மேன்மையும் தெரிகிறது. மொத்தத்தில் கவிதைகள் அனைத்திலும் கவிஞனின் உள்ளம் தெரிகிறது. நன்றி: குமுதம், 23/2/2015.
—-
சின்னச் சின்ன பொது அறிவு, சி. இலிங்க தமிழ்மொழி (தொகு.), சுபா பதிப்பகம், சென்னை, பக். 160, விலை 100ரூ.
சிறுவர்களுக்கான பொது அறிவை வளர்க்கவும் பெரியவர்களின் பொது அறிவை நினைவுக்குக் கொண்டு வரும்விதமாகவும் ஏராளமான பொது அறிவுச் செய்திகளை அள்ளித் தந்துள்ளார்கள். சின்னஞ் சிறிய உயிரினங்கள் முதல் உலகை முதன்முதலாக வலம் வந்த கப்பல் வரை பல செய்திகள் இதில் உள்ளன. கணிதமேதை ராமானுஜன் முதல் மர்லின் மன்றோவின் நினைவு தினம் வரை உலகச் செய்திகளை திகட்டத் திகட்ட தந்துள்ள நூல். நன்றி: குமுதம், 23/2/2015.