மாணவர்களுக்கான பொதுக் கட்டுரைகள்

மாணவர்களுக்கான பொதுக் கட்டுரைகள், வைரமூர்த்தி, சுபா பதிப்பகம், பக். 128, விலை 50ரூ. மாணவர்களுக்கு பொது அறிவு வளரும் விதத்தில் எழுதப்பட்டுள்ள 33 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். குடியரசு தினம், உழைப்பாளர் தினம், உழவர் திருநாள், உலக தண்ணீர் தினம், சுதந்திரதின விழா போன்ற முக்கிய நாட்கள் பற்றிய செய்திகளை மாணவர்கள் அறிந்து கொள்ள உதவுகிறது. பூலித்தேவன், வேலு நாச்சியார், வேலுத்தம்பி போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீர தீரத்தை எடுத்துச் சொல்வது சிறப்பு. அன்னை தெரசா, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, சரோஜினி நாயுடு, […]

Read more

நீங்கள் அறிய வேண்டிய முக்கிய சட்டங்கள்

நீங்கள் அறிய வேண்டிய முக்கிய சட்டங்கள், வழக்கறிஞர் முனைவர் சோ. சேசாசலம், சுபா பதிப்பகம், சென்னை, விலை 40ரூ. பல்வேறு நிலச்சட்டங்கள், தகவல் அறியும் உரிமைச்சட்டம், மதிப்புக் கூட்டுவரி வெள்ளை அறிக்கை, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு முதலியவை பற்றி விரிவாகக் கூறுகிறார் வழக்கறிஞர் முனைவர் சோ. சேசாலசலம். பயனுள்ள நூல். இதே நூலாசிரியர் எழுதிய மகளிருக்கான சட்டங்கள் விலை 50ரூ. நன்றி: தினத்தந்தி, 12/8/2015.   —- மூலிகை மருத்துவம், டாக்டர் எம்.எல்.ஜே. லார்ட்வின் லாரன்ஸ், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 50ரூ. தமிழ் […]

Read more

டாப் 200 வரலாற்று மனிதர்கள்

டாப் 200 வரலாற்று மனிதர்கள், பூ. கொ. சரவணன், விகடன் பிரசுரம், பக். 616, விலை 240ரூ. இந்த நாடு, இந்த மொழி, இந்த பிரதேசம், இந்த காலம் என்ற வரையறையை வைத்துக் கொள்ளவில்லை சரவணன். விவரமாக சொல்வதை விட, விறுவிறுப்பாக சொல்வதில் நூலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். ஈஸ்வர சந்திர வித்யாசாகர், வங்கத்தைச் சேர்ந்தவர். வேதங்கள், சமஸ்கிருத நூல்கள் ஆகியவற்றிலிருந்து, விதவை மறுமணத்துக்கு ஆதரவான கருத்துகளைத் திரட்டி புத்தகமாக வெளியிட்டவர். அவர், இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ‘கேர்’ என்னும் ஆங்கிலேயரைப் பார்க்கப்போனார். பூட்ஸ் அணிந்த […]

Read more

கவியமுதம்

கவியமுதம், கவிஞர் இரா. இரவி, வானதி பதிப்பகம், சென்னை, பக். 172, விலை 100ரூ. கவிஞர் இரா. இரவியின் கவிதைகள் ஒவ்வொன்றிலிருந்தும் தமிழின்-தமிழனின் உயிர்த் துடிப்பு கேட்கிறது. சமூக அவலங்களை எதிர்க்கும் ஒரு கலகக்குரல் கேட்கிறது. மொழியின் ஆன்மா தெரிகிறது. முற்போக்குச் சிந்தனையின் முகவரி தெரிகிறது. சமரசம் செய்து கொள்ளாத கொள்கை தெரிகிறது. காமராசரையும் பெரியாரையும் பாரதிதாசனையும் இன்னும் பல அறிஞர்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் உழைப்பு தெரிகிறது. எதிர்காலம் குறித்த நம்பிக்கை விதையை விதைக்கும்போக்கு தெரிகிறது. காதலின் வலிமையும் மேன்மையும் தெரிகிறது. […]

Read more