மாணவர்களுக்கான பொதுக் கட்டுரைகள்
மாணவர்களுக்கான பொதுக் கட்டுரைகள், வைரமூர்த்தி, சுபா பதிப்பகம், பக். 128, விலை 50ரூ.
மாணவர்களுக்கு பொது அறிவு வளரும் விதத்தில் எழுதப்பட்டுள்ள 33 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். குடியரசு தினம், உழைப்பாளர் தினம், உழவர் திருநாள், உலக தண்ணீர் தினம், சுதந்திரதின விழா போன்ற முக்கிய நாட்கள் பற்றிய செய்திகளை மாணவர்கள் அறிந்து கொள்ள உதவுகிறது.
பூலித்தேவன், வேலு நாச்சியார், வேலுத்தம்பி போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீர தீரத்தை எடுத்துச் சொல்வது சிறப்பு. அன்னை தெரசா, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, சரோஜினி நாயுடு, தேசிய விநாயகம் பிள்ளை உள்ளிட்ட அறிஞர்கள், காமராஜர், பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள், சென்னை நகரம், தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்ற தகவல்களும் யாசர் அராபத், மால்கம் எக்ஸ், வீரமாமுனிவர் போன்றோர் பற்றிய தகவல்களும் மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும்.
நன்றி: குமுதம்.