அர்த்த சாஸ்திர அறிவுரைகள்
அர்த்த சாஸ்திர அறிவுரைகள், நல்லிகுப்புசாமி செட்டியார், பிரெய்ன் பேங்க், பக். 192, விலை 150ரூ.
சாணக்கியரைப் பற்றி கூறுவதோடு அவரது நீதிநெறி அறிவுரைகளையும் சேர்த்துத் தந்துள்ளார் இந்நூலாசிரியர். மக்களை நல்வழிப்படத்த மன்னன் அவர்களின் உணர்வைப் புரிந்து கொண்டு நடக்க வேண்டும் என்ற ஜனநாயக உணர்வை வெளிப்படுத்தவே சாணக்கியர் ‘அர்த்த சாஸ்திரம்’ என்ற நூலைப் படைத்துள்ளார்.
இதை சாணக்கியர் வரலாற்றையும் அவரது அர்த்த சாஸ்திர அறிவுரைகளையும் கொண்டு நூலாசிரியர் விளக்கியுள்ளது சிறப்பு. சாணக்கியர் வரலாற்றில் அவர் ‘கிங் மேக்கராக’ இருந்திருப்பது தெரிய வருகிறது. அர்த்த சாஸ்திரம் பொருளாதாரம், நிர்வாகவியல் ஆகிய துறைகளுக்கு உதவும் அரிய நூலாக விளங்கியதை நிறுவுகிறார்.
மேலை நாடுகள் புரிந்து கொள்ளும் அளவிற்கு நாம் அர்த்த சாஸ்திரம் பற்றி அவர்களுக்கு சரிவர எடுத்துச் சொல்லவில்லை என்ற வருத்தம் இழையோடுகிறது. உலகின் முதல் பொருளாதார நூல் இது என்று பெருமை கொள்ள வேண்டும்.
“தற்புகழ்ச்சியை விடப் பெரிய பகைவன் வேறு யாருமில்லை” “அறிவைக் கொள்ளையடிக்க முடியாது” “உண்மையானவர்களுக்கும் திறமையானவர்களுக்கும் எதுவும் சாத்தியம்” “பணிவு உலகெங்கும் மதிக்கப்படும் பண்பு.” இப்படி அர்த்தசாஸ்திர நூலுக்கு எளிமையான விளக்கத்துடன் சாணக்கியரின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேற்கோள்களைத் தொகுத்தும் தந்துள்ள நூல் இது.
நன்றி: குமுதம்.