மருத்துவ அகராதி
மருத்துவ அகராதி, முனைவர் மு. பொன்வைக்கோ, தமிழ்ப்பேராயம், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், காஞ்சிபுரம், விலை 800ரூ.
சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பாக, தமிழறிஞர் த.வி. சாம்பசிவம் பிள்ளை மருத்துவ அகராதி ஒன்றை எழுதி வெளியிட்டார். மருத்துவம் பற்றிய சொற்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் விளக்கம் அளிக்கும் அகராதி அது. நீண்ட காலம் பாடுபட்டு உருவாக்கிய இது, அக்காலத்திலேயே மிகுந்த பாராட்டு பெற்றது. தமிழுக்குப் பெருமை சேர்க்கும் அந்த நூலை, நவீன வடிமைப்புடன், மிக பிரமாண்டமானதாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ஒரு உறுப்பாக விளங்கும் “தமிழ்ப் பேராயம்” வெளியிட்டுள்ளது. மிகப்பெரிய அளவில் 1040 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம், நூல் நிலையங்களில் அவசியம் இடம் பெற வேண்டியதாகும். நன்றி: தினத்தந்தி, 18/3/2015.
—-
சமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை, விலை 180ரூ.
ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோர்களது கண்ணோட்டத்தில் அனைத்துச் சமயங்கள் குறித்த மறுவிளக்கம் அளிக்கும் நூல். இதில் 6 ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மனித விடுதலையை மையமாகக் கொண்டது, இந்நூல் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி மாற்றம் செய்திருக்கிறார் முனைவர் அ.அந்தோணி குருசு. நன்றி: தினத்தந்தி, 18/3/2015.