எழுச்சி பெறு யுவனே
எழுச்சி பெறு யுவனே, சுவாமி விமூர்த்தானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியீடு, சென்னை, பக். 334, விலை 125ரூ.
ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தமிழ் இதழான, ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் வெளியாகி, வாசகர்களின் பெரும் பாராட்டைப் பெற்ற, 58 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இளைஞர் சக்திக்கு வலுவூட்ட, நம்மிடையே சாதித்த, சாதித்துக் கொண்டிருக்கும் வெற்றியாளர்களின் அனுபவங்களே, இந்த நூல். முதல் கட்டுரையிலேயே, டாக்டர் அப்துல் கலாம் இந்த நாட்டின், 54 கோடி இளைஞர்கள் எழுச்சி பெற, மணியான யோசனைகளை தருகிறார். அனைத்து கட்டுரைகளுமே சாதிக்க துடிக்கும் இளைஞர்களை, தட்டி கொடுத்து வழிநடத்தும் யோசனைகளை சொல்கின்றன. ஓடும் ரயிலில் நகையை பறிக்க வந்த, முரட்டு கும்பலை எதிர்த்து போராடிய, அருணிமா சின்ஹாவை, அந்த கும்பல் ரயிலை விட்டு வெளியே தூக்கி எறிந்தது. தொடைக்கு கீழே ஒரு காலை இழந்த அருணிமா, ஒரு வாலிபால் வீராங்கனை. இனி அவரால் ஓடி, ஆடி விளையாட முடியாது. எனினும், செயற்கை கால் ஒன்றை பொருத்தி, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிந்திருக்கிறார். மிக பயனுள்ள நூல். -மயிலை சிவா. நன்றி: தினமலர், 12/4/2015.
—-
தோற்றவர்கள்தான் வெற்றி பெற முடியும், சி.எஸ். தேவ்நாத், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 70ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-347-5.html குடும்பத்திலும், அலுவலகத்திலும், சமுதாயத்திலும் மனித உறவுகளில் விரிசல் ஏற்படாமல் இருககவும், ஏற்பட்ட விரிசல்கள் பெரிதாகாமலும் இருக்க இந்த நூல் உதவுகிறது. நன்றி: தினத்தந்தி, 25/2/2015.