மன நிர்வாகம் கற்க வேண்டிய கலை

மன நிர்வாகம் கற்க வேண்டிய கலை, சி.எஸ். தேவ்நாத், நர்மதா பதிப்பகம், பக். 224, விலை 120ரூ. ஆய கலைகள், 64 என்பர். மிகவும் அவசியமான கலை நம் மனதை அறிகிற கலை. இன்றும், மறு உலகிலும் நமக்கு கை கொடுக்கும் கலை. பிற உயிர்களுக்கு தீங்கு செய்கிற போது, நீ உனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறாய். மற்றவர்களுக்கு சேவைகள், நன்மைகள் செய்வதன் மூலம் உன் உடலையும் உள்ளத்தையும் துாய்மைப்படுத்திக் கொள்வாய். உன்னுள் தெய்வீக ஒளி பரவி அதன் மூலம் விமோசனம் பெறுவாய் என்று தர்மத்தின் […]

Read more

ஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்

ஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம், சி.எஸ்.தேவ்நாத், புதிய புத்தக உலகம், பக். 256, விலை 120ரூ. மனிதர்கள் நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம்? என்ற கேள்விக்கு இன்னும் உலகில் மானுடவியலாளர்கள் விடை தேடிக் கொண்டே தான் இருக்கின்றனர். அறிவியலில் ஆயிரம் பிரிவுகள் முயன்ற போதும், கடலின் மடியில் மறைந்து கிடக்கும் செல்வங்களை மதிப்பிட முடியாததைப் போல், வானிலும், மண்ணிலும் இன்னும் அறியப்படாத ரகசியங்கள் பொதிந்திருப்பதைப் போல, ஆன்மாவும் இருக்கிறது. அது தன்னுள் பல சக்திகளை தேக்கி வைத்திருக்கிறது, உண்மைகளை அடுக்கி வைத்திருக்கிறது என்று […]

Read more

ஊக்குவித்தல் என்னும் மந்திரசாவி

ஊக்குவித்தல் என்னும் மந்திரசாவி, சி.எஸ்.தேவ்நாத், நர்மதா பதிப்பகம், விலை 80ரூ. ஊக்குவிப்பதன் மூலம் ஒருவரிடம் இயல்பாக உள்ள சக்தியைத் துாண்ட முடியும்; அதிகரிக்க முடியும். அவரிடம் உள்ள மிகச் சிறந்தவற்றை வெளிக் கொண்டுவர முடியும். நிறைய படைப்பாளிகள் அப்படித்தான் உருவாக்கப்படுகின்றனர். சாதனைகள் அப்படித்தான் நிகழ்த்தப்படுகின்றன. சமயங்களில் ஊக்குவிப்பு வெளியிலும் கிடைக்கும்; வீட்டிலும் கிடைக்கும். உண்மையில் உங்களுக்கு உள்ளிருந்தும் அதை நீங்கள் பெற முடியும். ஊக்குவிப்பு செய்கிற வேலைகளில் முதன்மையானது, ‘நம்மால் முடியும்’ என்ற உணர்வை ஒருவருக்குள் ஊட்டுவதும் ‘அத்தனை உயர்வுகளுக்கும் நாம் தகுதியானவர்தாம்’ என்ற […]

Read more

ஜென் தத்துவ விளக்கக் கதைகள்

ஜென் தத்துவ விளக்கக் கதைகள், சி.எஸ்.தேவ்நாத், நர்மதா பதிப்பகம், பக். 192, விலை 100ரூ. இந்தியாவில் வேரூன்றி உலகு எங்கும் கிளை பரப்பி, மணம் வீசுவது புத்த மதம். ஜப்பான் மக்களின் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் புத்த தத்துவங்கள் வழி காட்டியுள்ளன. காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ற ஜென் தத்துவக் கதைகள், கைபேசி ‘சிப்’ அளவு சிறிதாக இருந்தாலும், கதையின் வீச்சு மனதைப் பெரிதா ஆக்கிரமித்துக் கொள்கிறது. ஒவ்வொரு கதையும் தர்க்க வாதங்களுடன் தொடங்குகிறது. தன்னைத் தான் ஆராய்கிறது. திருப்பமாக ஒரு தீர்ப்பைத் தருகிறது இந்தக் கதைகளில். […]

Read more

உணவே அமிர்தம் உணவே மருந்து

உணவே அமிர்தம், உணவே மருந்து, சி.எஸ். தேவ்நாத், சங்கர் பதிப்பகம், பக். 200, விலை 165ரூ. 40 வருடங்களுக்கு முன் சர்க்கரை நோயாளிகளை காண்பதே மிக அரிது. இன்று ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருவர் இந்நோய்க்கான சிகிச்சைக்கு அலைவதை காண்பது எளிது. இதற்கு நாம் உட்கொள்ளும் தவறான உணவு முறையும், போதிய உழைப்பின்மையுமே காரணம். ஆக எந்தவொரு நோயும் நம்மை தாக்காமல் இருக்கவும், நமது அழகு, இளமை, ஆராக்கியம் இம்மூன்றும் நீடித்திருக்கத் தேவையான ரகசியங்களை கூறுவதுமே இந்நூலின் நோக்கம். நாம் எப்படி, எந்தவகையான உணவுகளை […]

Read more

எழுச்சி பெறு யுவனே

எழுச்சி பெறு யுவனே, சுவாமி விமூர்த்தானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியீடு, சென்னை, பக். 334, விலை 125ரூ. ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தமிழ் இதழான, ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் வெளியாகி, வாசகர்களின் பெரும் பாராட்டைப் பெற்ற, 58 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இளைஞர் சக்திக்கு வலுவூட்ட, நம்மிடையே சாதித்த, சாதித்துக் கொண்டிருக்கும் வெற்றியாளர்களின் அனுபவங்களே, இந்த நூல். முதல் கட்டுரையிலேயே, டாக்டர் அப்துல் கலாம் இந்த நாட்டின், 54 கோடி இளைஞர்கள் எழுச்சி பெற, மணியான யோசனைகளை தருகிறார். அனைத்து கட்டுரைகளுமே சாதிக்க துடிக்கும் […]

Read more

கற்கண்டுக் கதை கேளு

கற்கண்டுக் கதை கேளு, மதிஒளி, உத்திராடம் புக்ஸ், சென்னை, பக். 128, விலை 120ரூ. குழந்தை இலக்கியம் வகையை சார்ந்தது இந்த நூல். குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் எழுத்து நடை அமைந்துள்ளது. பொம்மைகளும், கதைகளுமே குழந்தைகளின் அற்புத உலகம். இந்த புத்தகத்தில் உள்ள கதைகளை, நம் பிள்ளைகளை படிக்க சொல்லியோ, நாம் படித்தோ சொல்லலாம். அவர்கள் இந்த கதைகளை விரும்பி ரசிப்பர் என்பதில் ஐயமில்லை. நாம் பெரும்பாலும் கேட்ட கதைகள் இந்த புத்தகத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அன்னிய நாட்டு மொழிகளில் இருந்து, […]

Read more

தோழர் ஈ.வெ.ரா. நாகம்மையார்

தோழர் ஈ.வெ.ரா. , நாகம்மையார், முனைவர் ந.க. மங்கள முருகேசன், தென்றல் பதிப்பகம், 13/3, பீட்டர் சாலை குடியிருப்பு, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 204, விலை 150ரூ. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும், ஒரு பெண் இருக்கிறாள் என்னும் வாக்கிற்கு உயிரோட்டம் தரும் வகையில் ஈ.வெ.ரா. முன்னேற்றத்திற்கு அடித்தளமாய் விளங்கியவர் அவரது துணைவியார் ஈ.வெ.ரா., நாகம்மையார். நான் சுயநல வாழ்வில் மைனராய், காலியாய், சீமானாய் இருந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாயிருந்த காலத்திலும், எனக்கு வாழ்வில், ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் […]

Read more