ஆயுளை அதிகரிக்கும் அதிசய உணவு முறைகள்

ஆயுளை அதிகரிக்கும் அதிசய உணவு முறைகள், கே.எஸ்.சுப்ரமணி, புதிய புத்தக உலகம், விலை 140ரூ. அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. எந்த உணவுப் பொருளை எப்படி சாப்பிட்டால் எந்த பாதிப்பு தீரும், எந்த உணவைத் தவிர்க்க வேண்டும் என்பவை மிக எளிய முறையில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. ஆரோக்கியமாக நீண்ட காலம் இளமைத் துடிப்புடன் வாழ இந்த நூல் நல்ல வழிகாட்டியாக இருக்கும். கை விரல் முத்திரைகள் மூலம் பல வியாதிகளை விரட்டலாம் என்ற தகவல் வியப்பு அளிக்கிறது. […]

Read more

ஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்

ஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம், சி.எஸ்.தேவ்நாத், புதிய புத்தக உலகம், பக். 256, விலை 120ரூ. மனிதர்கள் நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம்? என்ற கேள்விக்கு இன்னும் உலகில் மானுடவியலாளர்கள் விடை தேடிக் கொண்டே தான் இருக்கின்றனர். அறிவியலில் ஆயிரம் பிரிவுகள் முயன்ற போதும், கடலின் மடியில் மறைந்து கிடக்கும் செல்வங்களை மதிப்பிட முடியாததைப் போல், வானிலும், மண்ணிலும் இன்னும் அறியப்படாத ரகசியங்கள் பொதிந்திருப்பதைப் போல, ஆன்மாவும் இருக்கிறது. அது தன்னுள் பல சக்திகளை தேக்கி வைத்திருக்கிறது, உண்மைகளை அடுக்கி வைத்திருக்கிறது என்று […]

Read more

காசி முதல் ராமேஸ்வரம் வரை பயண வழிகாட்டி

காசி முதல் ராமேஸ்வரம் வரை பயண வழிகாட்டி, புதிய புத்தக உலகம், விலை 120ரூ. காசி யாத்திரை என்பது இந்துக்கள் வாழ்க்கையில் முக்கியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய கடமையாக உள்ளது. காசி யாத்திரை என்பது காசி – ராமேஸ்வரம் – கயா ஆகிய மூன்று தலங்களையும் இணைப்பதாக இருக்கிறது. இந்த நூலில் காசி முதல் ராமேஸ்வரம் வரையிலான புனித தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்வதற்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக இந்த நூலை லட்சமி சுப்பிரமணியம் வடிவமைத்துள்ளார். புனிதப் பயணம் மேற்கொள்வோருக்கு பயனுள்ள இனிய நூல். நன்றி: தினத்தந்தி, […]

Read more

பெய்ரூத்திலிருந்து ஜெருசலேம் வரை

பெய்ரூத்திலிருந்து ஜெருசலேம் வரை, ஆங்க் ஸ்வீ சாய், அடையாளம், புத்தாநத்தம், விலை 320ரூ. பாலஸ்தீனத்தில் தொடரும் துயரங்கள் இந்நூலின் ஆசிரியரான மருத்துவர் ஒரு சீனர். இவர் சிறு வயதில் இஸ்ரேலிய ஆதரவாளராக வளர்க்கப்பட்டவர். அராபியர்கள் குறித்த எதிர்மறையான எண்ணமே அவருக்கு இருந்துள்ளது. 1982ம் ஆண்டில் இஸ்ரேலியப் போர் விமானங்கள் பெய்ரூட் நகரத்தை இடைவிடாமல் தாக்கியபோது அவர் அதிர்ச்சியடைந்தார். இஸ்ரேல் குறித்த பார்வை மாறத் தொடங்கியது. பெய்ரூட்டில் போரால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்குச் சேவை செய்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் இவர் லண்டனில் பார்த்துவந்த பணியை […]

Read more

திரை

திரை, எஸ்.எல். பைரப்பா, விஜய பாரதம் பதிப்பகம், 12, எம்.வி. நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை 31, பக். 470, விலை 250ரூ. புகழ்பெற்ற கன்னட எழுத்தாளரான இந்நூலாசிரியரின் படைப்பு ஆவரணா இந்த நாவல் வெளியாகி 5 வருடத்திற்குள் 30 பதிப்புகளைப் பெற்று, கன்னட வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நாவல் மராட்டி, ஹிந்தி, சமஸ்கிருதத்திலும், தற்போது திரை என்ற பெயரில் தமிழிலும் சிறப்பாக மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. ஆவரணா என்பதற்கு திரை என்ற பொருளும் உண்டு. அதையே தமிழில் இந்நாவலுக்குத் தலைப்பாக வைத்துள்ளனர். […]

Read more