ஆயுளை அதிகரிக்கும் அதிசய உணவு முறைகள்

ஆயுளை அதிகரிக்கும் அதிசய உணவு முறைகள், கே.எஸ்.சுப்ரமணி, புதிய புத்தக உலகம், விலை 140ரூ. அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. எந்த உணவுப் பொருளை எப்படி சாப்பிட்டால் எந்த பாதிப்பு தீரும், எந்த உணவைத் தவிர்க்க வேண்டும் என்பவை மிக எளிய முறையில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. ஆரோக்கியமாக நீண்ட காலம் இளமைத் துடிப்புடன் வாழ இந்த நூல் நல்ல வழிகாட்டியாக இருக்கும். கை விரல் முத்திரைகள் மூலம் பல வியாதிகளை விரட்டலாம் என்ற தகவல் வியப்பு அளிக்கிறது. […]

Read more

திரை

திரை, எஸ்.எல். பைரப்பா, விஜய பாரதம் பதிப்பகம், 12, எம்.வி. நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை 31, பக். 470, விலை 250ரூ. புகழ்பெற்ற கன்னட எழுத்தாளரான இந்நூலாசிரியரின் படைப்பு ஆவரணா இந்த நாவல் வெளியாகி 5 வருடத்திற்குள் 30 பதிப்புகளைப் பெற்று, கன்னட வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நாவல் மராட்டி, ஹிந்தி, சமஸ்கிருதத்திலும், தற்போது திரை என்ற பெயரில் தமிழிலும் சிறப்பாக மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. ஆவரணா என்பதற்கு திரை என்ற பொருளும் உண்டு. அதையே தமிழில் இந்நாவலுக்குத் தலைப்பாக வைத்துள்ளனர். […]

Read more