வளமான வாழ்வு தரும் துளசி வழிபாடு

வளமான வாழ்வு தரும் துளசி வழிபாடு, வேணு சீனிவாசன், அழகு பதிப்பகம், பக். 176, விலை 150ரூ.

துளசியைப் பற்றிப் பல நுால்கள் வந்திருந்தபோதிலும், இந்த நுால் சற்று வித்தியாசமானது.

இதை ஆன்மிகமும், அறிவியலும் கலந்த கலவையாக உருவாக்கியிருக்கிறார் ஆசிரியர். இந்நுாலை மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பல தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார்.

முதல் பகுதி – இலக்கியம், இதிகாசம், புராணங்கள் ஆகியவற்றில் சொல்லப்பட்டுள்ள துளசியின் பெருமையை விவரிக்கிறது.

இரண்டாம் பகுதி – துளசி வழிபாடு, ஸ்தோத்திரங்கள், வழிபட வேண்டிய முறை, அதனால் பெறப்படும் பலன்கள் முதலியவற்றை தெரிவிக்கிறது.

மூன்றாம் பகுதி – துளசியின் மருத்துவ குணங்கள், தெய்வீக மூலிகையான துளசியைப் பயன்படுத்தினால் கட்டுப்படும் நோய்கள், சுற்றுச்சூழலில் துளசியின் முக்கியத்துவம் ஆகியவை விளக்கப்படுகின்றன. அனைவருக்கும் பயன்படக்கூடிய நுால்.

– மயிலை சிவா

நன்றி: தினமலர், 5/11/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *