ஒலிம்பிக்ஸ் விளையாட்டும், உலக ஜாம்பவான்களும்

ஒலிம்பிக்ஸ் விளையாட்டும், உலக ஜாம்பவான்களும்,  நா.விஜயரெகுநாதன், டிஸ்கவரி புக் பேலஸ் (பி) லிமிடெட், பக்.144, விலை ரூ.125. கிரேக்கத்தில் தொடங்கிய பழங்கால ஒலிம்பிக் வரலாறு, தொடக்கத்தில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, மீறிப் பார்க்கும் பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, நவீன ஒலிம்பிக்கின் வரலாறு, ஒலிம்பிக்கில் படைக்கப்பட்ட சாதனைகள், சுவாரஸ்யமான சம்பவங்கள், பயங்கரவாத தாக்குதல்கள் போன்றவற்றை நூலாசிரியர் அற்புதமாகப் பதிவு செய்துள்ளார். பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் சிந்து உள்ளிட்ட வீரர்கள் படைத்த சாதனை, ஒலிம்பிக்கில் இந்தியாவின் நிலை, ஹாக்கியில் இந்தியாவின் சாதனை, தயான் சந்த், […]

Read more

இங்கே எதற்காக

இங்கே எதற்காக?, இயக்குநர் ஜெயபாரதி, டிஸ்கவரி புக் பேலஸ் பி.லிட், சென்னை, விலை 150ரூ. உதாசீனங்களே சன்மானமாய் வெற்றி பெற்றவர்களின் வரலாறு எளிதில் பரவிவிடும். அதற்குப் பெரும் எத்தனிப்புகள் அவசியமல்ல. ஆனால் வெற்றிபெறும் வரை அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் போராட்டங்களும் அவஸ்தையானவை. வெற்றிக்கும் மரியாதையும் தோல்விக்கு உதாசீனமுமே சன்மானங்கள். இந்த மாயம் புரிபடாதபோதும் படைப்பின் மீது கொண்ட தீராத காதலால் பல ஆளுமைகள் திரையென்னும் சுழலுக்குள் சிக்கிச் சுழல்கிறார்கள். அப்படியொரு ஆளுமை ஜெயபாரதி. தீவிரமான தமிழ் திரைப்படங்களில் ஈடுபாடு கொண்ட ஜெயபாரதி என்னும் பெயர் […]

Read more