எங்கே எதற்காக

எங்கே எதற்காக, இயக்குநர் ஜெயபாரதி, டிஸ்கவரி புக்பேலஸ் பி.லிட், பக். 182, விலை 150ரூ. தமிழில் ஒரு யதார்த்த சினிமாவை உருவாக்கி வெற்றிபெற்றவர் இயக்குனர் ஜெயபாரதி. அவரின் திரை உலக வாழ்க்கை நிகழ்ச்சிகளின் தொகுப்பு இந்நூல். தன் பள்ளிப்பருவம் முதல் இன்று வரை நாடகம், சினிமா என்று இவர் இயங்கி வந்த அனுபவங்கள் ஒரு திரைப்படம்போல் விரிகிறது. சத்யஜித்ரே, மிருனாள் சென் உள்ளிட்ட மேதைகளின் தாக்கம் இதுவரை சினிமாவுக்குள் இழுத்துப்போட்டது சுவாரஸ்யம். பாலசந்தரின் மூன்று முடிச்சு, பட்டினப்பிரவேசம் போன்ற படங்களில் நாயகனாக நடித்திருக்க வேண்டியவர். […]

Read more

இங்கே எதற்காக

இங்கே எதற்காக?, இயக்குநர் ஜெயபாரதி, டிஸ்கவரி புக் பேலஸ் பி.லிட், சென்னை, விலை 150ரூ. உதாசீனங்களே சன்மானமாய் வெற்றி பெற்றவர்களின் வரலாறு எளிதில் பரவிவிடும். அதற்குப் பெரும் எத்தனிப்புகள் அவசியமல்ல. ஆனால் வெற்றிபெறும் வரை அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் போராட்டங்களும் அவஸ்தையானவை. வெற்றிக்கும் மரியாதையும் தோல்விக்கு உதாசீனமுமே சன்மானங்கள். இந்த மாயம் புரிபடாதபோதும் படைப்பின் மீது கொண்ட தீராத காதலால் பல ஆளுமைகள் திரையென்னும் சுழலுக்குள் சிக்கிச் சுழல்கிறார்கள். அப்படியொரு ஆளுமை ஜெயபாரதி. தீவிரமான தமிழ் திரைப்படங்களில் ஈடுபாடு கொண்ட ஜெயபாரதி என்னும் பெயர் […]

Read more