எங்கே எதற்காக

எங்கே எதற்காக, இயக்குநர் ஜெயபாரதி, டிஸ்கவரி புக்பேலஸ் பி.லிட், பக். 182, விலை 150ரூ.

தமிழில் ஒரு யதார்த்த சினிமாவை உருவாக்கி வெற்றிபெற்றவர் இயக்குனர் ஜெயபாரதி. அவரின் திரை உலக வாழ்க்கை நிகழ்ச்சிகளின் தொகுப்பு இந்நூல். தன் பள்ளிப்பருவம் முதல் இன்று வரை நாடகம், சினிமா என்று இவர் இயங்கி வந்த அனுபவங்கள் ஒரு திரைப்படம்போல் விரிகிறது. சத்யஜித்ரே, மிருனாள் சென் உள்ளிட்ட மேதைகளின் தாக்கம் இதுவரை சினிமாவுக்குள் இழுத்துப்போட்டது சுவாரஸ்யம். பாலசந்தரின் மூன்று முடிச்சு, பட்டினப்பிரவேசம் போன்ற படங்களில் நாயகனாக நடித்திருக்க வேண்டியவர். குடிசை என்ற மாற்று சினிமாவை தந்தது மட்டுமல்ல, வணிகமயமான தமிழ் சினிமாவின் போக்கை உடைத்துக் காட்டியவர். சிவாஜி, கண்ணதாசன், ரஜினி, கமல், ரிஷிகேஸ் முகர்ஜி, எம்.டி. வாசுதேவன் நாயர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பிரபலங்களுடன் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள், சினிமா வரலாற்றுக்கான ஆவண நிகழ்வுகள். ஜெயபாரதியின் இந்நூல் தமிழ் சினிமாவின் சரித்திரம் என்பதைத் தாண்டி மாற்று சிந்தனை உள்ள இளைஞர்களுக்கு ஒரு தூண்டுகோலாய் விளங்குகிறது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 14/9/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *