இவனன்றோ என் நண்பன்

இவனன்றோ என் நண்பன், சூ.குழந்தைசாமி, காந்தி அமைதி நிறுவனம், பக்.72, விலை ரூ.20. காந்திய நெறி பரப்பும் பணியில் தனது இளமைக்காலம் முதல் ஈடுபட்டு வரும் நூலாசிரியர், தனது வாழ்வில் நடந்த பல சுவையான நிகழ்ச்சிகளை இந்நூலில் தொகுத்து வழங்கியிருக்கிறார். சிறுவயதில் ஒன்றுக்கும் உதவாதவராக இருந்த அவர் 21 வயதில் ஒரு 52 வயது நண்பரைச் சந்திக்கிறார். அவர் டி.டி.திருமலை. அவரைச் சந்தித்த நாள் முதல் அவரின் வழிகாட்டலில் தனது வாழ்க்கை எவ்வாறு நல்லவிதமாக மலர்ந்தது என்பதை பல நிகழ்வுகள் மூலம் மிகவும் சுவையாக […]

Read more

பதினெண்கீழ்க்கணக்கு வடிவமும் வரலாறும்

பதினெண்கீழ்க்கணக்கு வடிவமும் வரலாறும், ப. திருஞானசம்பந்தம், நெய்தல்பதிப்பகம், பக்.228, விலை ரூ.200. யாப்பிலக்கணத்தை ஆய்வுப் பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட எட்டு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். தமிழ் யாப்பியல் குறித்த அறிமுகத்துடன் தொடங்கும் இந்நூலில், பதினெண்கீழ்க்கணக்கு யாப்பியல் ஆய்வு வரலாறு, திருக்குறளில் யாப்பியல் குறித்து அயலக, தமிழக அறிஞர்களின் ஆய்வுகள், கீழ்க்கணக்கு இலக்கியங்களில் உள்ள புதுவகையான இன்னிசை வெண்பாக்கள், தொடை நலன்கள், தமிழில் உள்ள ஓரெதுகையின் வரலாறு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பழந்தமிழ் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள் முதலியவற்றை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. களவழி நாற்பதில் இடம்பெறுகின்ற […]

Read more

சிவமகுடம்

சிவமகுடம், ஆலவாய் ஆதிரையன், விகடன் பிரசுரம், விலை 225ரூ. தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர்களும், பல்லவர்களும், களப்பிரர்களும், சாளுக்கியர்களும் அடிக்கடி போரிட்டுக் கொள்வது வழக்கம். அந்தக் காலக்கட்டத்தில் நடைபெற்ற “உறையூர் போர்”, ஒரே நாளில் நடந்து முடிந்துவிட்டது! எனினும் பிற்கால வரலாற்றை மாற்றிப்போட்டது. சில காலம் சமண மதத்தைத் தழுவியிருந்த பாண்டிய மன்னன் கூன் பாண்டியன், உறையூரின் மீது படையெடுத்தபோது நடந்த சம்பவங்களின் பின்னணியில் எழுதப்பட்ட இந்த சரித்திரக்கதை, விறுவிறுப்பாக அமைந்துள்ளது. ஸ்யாம் வரைந்த வண்ணப்படங்கள் கண்ணைக் கவருகின்றன. நன்றி: தினத்தந்தி 6/6/2018.   […]

Read more

திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள்

திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள், இரா.பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், பக்.408, விலை ரூ.400. திருவள்ளுவரின் திருக்குறளில் பல தாவரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அந்த தாவரங்களின் இயல்புகள் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. திருக்குறளில் வரும் தாவரங்கள் பற்றி பேராசிரியர் இரா.பஞ்சவவர்ணம் ஆழமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு, ஏராளமான தகவல்களை இந்த நூலின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் ஆராய்ச்சியாளர்களின் கையில் இருக்க வேண்டிய அரிய நூல். நன்றி: தினத்தந்தி 6/6/2018.   இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026859.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன்

உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன், கவிக்கோ அப்துல் ரகுமான், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 384, விலை 300ரூ. நம்மைச் சுற்றிலும், உலகிலும் கவிதை இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள புதிய வெளிச்சங்களைக் காணப் பொழுதில்லாத நமக்கு, ரகுமான் திறந்து வைத்துள்ள சாளரங்கள், வெளி உலகைப் பார்க்கும் கண்களாய் இல்லை, நம் மீது சுகந்தம் இறைக்கும் புதிய காற்றாய் ததும்புகின்றன’ என, இந்த நுாலைப் புகழ்கிறார், கவி சிற்பி! உருது கவிஞர், கைபி ஆஸ்மி பற்றி, அப்துல் ரகுமான் சொல்கிறார்: உருது கவிஞர், கைபி ஆஸ்மி அற்புதமான கவிதைகளை […]

Read more

அழகர் அணை

அழகர் அணை, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கலைஞன் பதிப்பகம், விலை 100ரூ. தமிழ்நாட்டில் சமீபகாலங்களாக எந்தவித புதிய அணைகளும் கட்டப்படவில்லை என்ற குறை மக்களிடையே உள்ளது. அதிலும் குறிப்பாக, விருதுநகர் மாவட்டம் ஒரு வானம் பார்த்த பூமியாகும். அங்கு விவசாய பாசனம் மற்றும் குடிநீருக்கு சரியான திட்டங்கள் இல்லை. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவாகாசி, சாத்தூர், விருதுநகர் பகுதிகளுக்காக குடிநீர் வசதிக்கும், நீர்பாசன வசதிக்கும் அழகர் அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை 90 ஆண்டுகளாக அப்படியே நிலுவையில் உள்ளது. பெரியாறு, வைகை […]

Read more

வருங்கால தமிழகம் யாருக்கு?

வருங்கால தமிழகம் யாருக்கு?, முனைவர் சீமான் இளையராஜா, டி.ஐ.எஸ்.எஸ்.எல்.பப்ளிகேஷன்ஸ், விலை 250ரூ. அயோத்திதாச பண்டிதர் சிறந்த தமிழ் அறிஞர். பகுத்தறிவுவாதி. சாதி சமயங்களை நீக்கி செயல்பட்டவர். அவருடைய வாழ்க்கையையும், தமிழ்ப்பணிகளையும் ஆராய்ந்து இந்தப் பெருநூலை எழுதியுள்ளார் முனைவர் சீமான் இளையராஜா. நன்றி: தினத்தந்தி 6/6/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மக்கள் தலைவர் கலைஞரும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும்

மக்கள் தலைவர் கலைஞரும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், கமலா கந்தசாமி, நர்மதா பதிப்பகம், விலை 90ரூ. மக்கள் தலைவர் கலைஞர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்னும் இருபெரும் மேதைகளின் இனிய உறவையும் அவர்களுடைய நட்பின் மேன்மையையும் எடுத்துக்கூறும் நூல். அதோடு இருவர் வாழ்விலும் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள், இருவருக்கமான நல்லியல்புகள் ஆகியவற்றை நேர்த்தியான முறையில் படைத்து இருக்கிறார் நூலின் ஆசிரியர் கமலா கந்தசாமி. நன்றி: தினத்தந்தி 6/6/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026854.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த்

திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த், ம.தொல்காப்பியன், கைத்தடி பதிப்பகம், விலை 120ரூ. பஸ் கண்டக்டர் வேலை பார்த்த ஒருவர் கடும் உழைப்பாலும், அசாத்திய திறமையினாலும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்த சம்பவம் நமது தமிழகத்தில்தான் நடந்துள்ளது. சூப்பர் ஸ்டாராக உயர்ந்தது மட்டுமல்ல, நீண்ட காலமாக அந்தப் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் வாழ்க்கை வரலாறுடன், அவரது திறமைகளை அலசி ஆராய்கிறது இந்த நூல். ரஜினியைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள இந்த நூல் உதவும். நன்றி: தினத்தந்தி, 6/6/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026858.html இந்தப் புத்தகத்தை […]

Read more

மிஸா கொடுமை

மிஸா கொடுமை, விசிட்டர் அனந்த், நக்கீரன், விலை 200ரூ. ‘எமர்ஜென்ஸி‘ என அறியப்பட்ட நெருக்கடி நிலை காலகட்டத்தில் நடந்த ஜனநாயக படுகொலைகள், நெஞ்சை பதறவைக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து தமிழ்ச்சூழலில் முதன் முதலில் புத்தக வடிவில் பதிவு செய்தவர் நூலாசிரியர் ‘விசிட்டர்’ அனந்த். இவர் 40 ஆண்டுகளுக்கு முன்பு 4 தலைப்புகளில் கொண்டு வந்த இந்த நூல் அப்போது பெரும் வரவேற்பை பெற்றது. தற்போதைய தலைமுறையினரும் இதுபற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நக்கீரன் பதிப்பகம் மீண்டும் இந்த புத்தகத்தை ஒரே தலைப்பில் […]

Read more
1 2 3 4 5 8