தேனீர் குவளையில் சூறாவளி

தேனீர் குவளையில் சூறாவளி, ஜோஸ்னா ஜோன்ஸ், கைத்தடி பதிப்பகம், விலைரூ.225. ஆப்ரிக்க நாடான சூடானில் வசிக்கும் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி எழுதிய கவிதைகளின் தொகுப்பு நுால். ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் பெயர்த்துள்ளார் பிலிப் சுதாகர். வள வள தாளில், பொருத்தமான ஓவியங்களுடன் இணைத்து, புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. ‘வலிகளற்ற மகிழ்ச்சிக்கு மதிப்பு ஏதும் இல்லை…’ என, முதல் கவிதை சொட்டுகிறது. வாழ்வின் தகிப்பை கேள்விகளாக்கி, சொல்லில் சிற்பம் செதுக்கும் முயற்சியாக, மன உணர்வின் வெளிப்பாடாக உள்ளது. ஒரு பலவீனமான கவசம் அணிந்தவரின் மனநிலையை வெளிப்படுத்தும் […]

Read more

கண்ணன் எத்தனை கண்ணனடி

கண்ணன் எத்தனை கண்ணனடி, மாலதி சந்திரசேகரன், கைத்தடி பதிப்பகம், பக்.242, விலைரூ. 225. வித்தியாசமான நூல் இது. பகவான் கண்ணனின் லீலைகளை கண்ணனுடன் தொடர்புடையவர்கள் வாய் மொழியாக தெரிவிப்பதாக அமைந்துள்ளது. சுமார் 20 பாத்திரங்கள் கண்ணனின் லீலைகள் குறித்து பேசுகின்றன. குறிப்பாக, வசுதேவருக்கும் ரோஹிணிக்கும் மகனாகப் பிறந்த பலராமனின் பிறப்பு, அப்போது நடந்த சம்பவங்களை நந்தகோபன் கூறுகிறார். அடுத்ததாக, குழந்தை கிருஷ்ணர் மாம்பழம் விற்கும் கிழவியின் ஆசைப்படி, அவளை அம்மா என்றழைத்து மாம்பழம் பெற்ற லீலையை என்னவென்று சொல்வது? பகவானை வணங்கி நாம் ஓரடி […]

Read more

காதலின் மென்பொருள் சாவித்திரி கணேஷ்

காதலின் மென்பொருள் சாவித்திரி கணேஷ், மு.ஞா.செ. இன்பா, கைத்தடி பதிப்பகம், பக். 194, விலை ரூ.125. நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை கவித்துவ நடையில் விவரிக்கும் நூல். சாவித்திரி தன் வாழ்வை, கலைக்கும், காதலுக்கும் அர்ப்பணித்து வாழ்ந்திருப்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது. சாவித்திரி மீது ஜெமினி கொண்ட காதல் உயர்ந்ததா, ஜெமினி மீது சாவித்திரி கொண்ட காதல் உயர்ந்ததா… என்று பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு இருவரின் காதல் உணர்வுகளும் படம் பிடித்து காட்டப்பட்டுள்ளன. சிறு வயதில் நடனம் கற்று, நாடகங்களில் நடித்து வந்த சாவித்திரி தேவதாஸ் படத்தில் […]

Read more

மகாபாரதமும் மாயக் கண்ணனும்

மகாபாரதமும் மாயக் கண்ணனும், இரா.ஜீவரத்தினம், கைத்தடி பதிப்பகம், பக்.114, விலை 120ரூ. இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் கோகுல கிருஷ்ணனின் ஆளுமை மிகுந்து காணப்படும். இதில் பலவித மாயங்களைப் புரிந்து, எல்லாரின் மனதிலும் எப்போதும் நீக்கமற நிறைந்திருப்பவன் மாயக் கண்ணன். பாரதக் கதையின் மீது நாட்டம் கொண்ட ஜீவரத்தினம், வியாச பாரதம் மற்றும் வில்லிபுத்துாரார் பாரதம் முதலியவற்றில் உள்ள நிகழ்ச்சிகளை தொகுத்து, வாசர்களின் பாராட்டைப் பெறுகிறார். – மாசிலா இராஜகுரு நன்றி: தினமலர், 5/5/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027995.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

மகாபாரதமும் மாயக்கண்ணனும்

மகாபாரதமும் மாயக்கண்ணனும், இரா.ஜீவரத்தினம், கைத்தடி பதிப்பகம், பக். 114, விலை 120ரூ. இதிகாச நுால்களில் ஒன்றான மகாபாரதத்தில் கண்ணனின் ஆளுமை அதிகம். இந்த காவியத்தில் பலவிதமான மாயங்களை புரிந்து, எல்லாருடைய மனதிலும் நீங்கா இடம் பெற்றுள்ளவன் கிருஷ்ணன். இந்நுாலில், கண்ணனின் மாயச் செயல்களை தொகுத்து வழங்கியுள்ளார் ஜீவரத்தினம். படிக்கும் வாசகர்களின் மனதில், அழகிய சித்திரங்களுடன் திரை காவியம் படைக்கிறது இந்நுால். நன்றி: தினமலர், 3/3/2019. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

ம்… நானும்…!

ம்… நானும்…!, மு.ஞா.செ.இன்பா, கைத்தடி பதிப்பகம், விலை 100ரூ. கொஞ்சம் குசும்பு முதல், கொஞ்சம் கெஞ்சல் வரை பல்வேறு நவீன கவிதைகள் பலரை ஈர்க்கும். நாகரிகக் காமம் என்ற கவிதையில், ‘நாயர் கடை ஸ்டிராங் டீ போல, உன் மாராப்பு இல்லா மேலும் கீழும் ஆட… என்பது போன்ற வரிகள் இளைஞர்களைக் கவரும். இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கவிதைகள் கருத்தைக்கவரும். நன்றி: தினமலர், 27/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

சிவாஜி ஆளுமை பாகம் 3

சிவாஜி ஆளுமை, பாகம் 3, மு.ஞா.இன்பா, கைத்தடி பதிப்பகம், விலை 350ரூ. நடிப்புக்காகவே பிறந்த சிவாஜியின் நாடகம், திரையுலக வாழ்க்கை மட்டுமல்ல, அரசியல் பணிகள், தலைவர்களுடன் நட்பு என பல பரிணாமங்களையும் 348 பக்கங்களில் ஆழமாக எடுத்துக்காட்டுகிறது இந்நூல். சிவாஜி பற்றி நாம் அறியாத பல தகவல்களை தேடிக்கண்டுபிடித்து அருமையாக தொகுத்திருக்கிறார் நூலாசிரியர். எம்.ஜி.ஆர். படத்துக்காக தி.மு.க.அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் திரையரங்குகளை அடைத்து போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றிருக்கிறார். எம்.ஜி.ஆர்., சிவாஜி இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி என்பது அனைவருக்கும் தெரியும். […]

Read more

விவசாயம்

விவசாயம், டாக்டர் வி.ஜி.சந்தோசம், கைத்தடி பதிப்பகம், பக்.148, விலை 140ரூ. விவசாயம் இல்லையென்றால் வாழ்வு இல்லை. விவசாயி என்ற வீரத் திருமகன், விந்தைகள் பல புரிந்து, வியர்வை சிந்தி, உணவிற்கான தானியங்களை உற்பத்தி செய்து, உலக உயிர்களுக்கு உன்னதம் செய்கிறான் என்ற சிறப்பைச் சொல்கிறார் இந்நுாலாசிரியர். உற்பத்தி செய்யப்படும் உணவு தானியங்கள், மனித வாழ்வில் தினை வகைகளின் பங்கு, உலக அரங்கில் விவசாயத்தின் நிலைப்பாடு, தோட்டக்கலைத் துறையால் விவசாயிகளின் முன்னேற்றம், உழவனின் பெருமை, இயற்கை உரம் தயாரிக்கும் முறை, பனை மர விவசாயம், சொட்டு […]

Read more

சிவாஜியின் அரசியல் அத்தியாயம்

சிவாஜியின் அரசியல் அத்தியாயம், மு.ஞா.செ.இன்பா, கைத்தடி பதிப்பகம், விலை 350ரூ. சிவாஜி ஆளுமை 3-வது பாகத்தில் சிவாஜியின் அரசியல் பிரவேசம் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. மிகச் சிறந்த இந்திய நடிகரான சிவாஜிக்கு அரசியலில் நடிக்கத் தெரியாது என்பதை அவரது ஒவ்வொரு அரசியல் முடிவுகளும் எடுத்துக்காட்டுகின்றன. காமராஜரின் மறைவுக்குப் பிறகு இந்திரா காங்கிரஸை ஆதரித்தது தவறான முடிவு என்பதை வரலாற்றுச் சான்றுகளுடன் பேசுகிறது. ‘ஏற்றுக்கொண்ட தலைமைக்கு சிவாஜி இறுதிவரை விசுவாசமாக இருந்தார். காங்கிரஸ் தன்னை மட்டம் தட்டியபோதெல்லாம் மனம் சோர்ந்துவிடாமல் அவமானங்களைத் தூக்கி எறிந்துவிட்டு தலைமைக்கு […]

Read more

திக்… திக்… பயணம்

திக்… திக்… பயணம், சி.வீராகு, கைத்தடி பதிப்பகம், விலை 110ரூ. உலகம் ஒரு நதியின் கிளைகள் என்பதை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. அவை கற்றுத் தரும் பாடத்தை மதங்கள் பற்றிக் கொண்டால், மனித நேயம் மனங்களோடு பேசி அன்பை போதிக்கும். வர்ணனை ஜாலங்களை துாக்கிக் கொண்டு போலி சுருதி சேர்க்காமல், கிராமத்து மெட்டு போல எதார்த்த மொழியில் வீரரகு புனைந்திருக்கும் இந்நுால், ஆன்மிகத்தின் வாயிலாக அழகிய காட்சிகளை நம் கண் முன் கொண்டு வந்து, பிற மதத்தினரை ரசிக்க வைத்துள்ளது. நன்றி: தினமலர், 20/7/2018. இந்தப் […]

Read more
1 2