சிவாஜியின் அரசியல் அத்தியாயம்
சிவாஜியின் அரசியல் அத்தியாயம், மு.ஞா.செ.இன்பா, கைத்தடி பதிப்பகம், விலை 350ரூ.
சிவாஜி ஆளுமை 3-வது பாகத்தில் சிவாஜியின் அரசியல் பிரவேசம் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது.
மிகச் சிறந்த இந்திய நடிகரான சிவாஜிக்கு அரசியலில் நடிக்கத் தெரியாது என்பதை அவரது ஒவ்வொரு அரசியல் முடிவுகளும் எடுத்துக்காட்டுகின்றன. காமராஜரின் மறைவுக்குப் பிறகு இந்திரா காங்கிரஸை ஆதரித்தது தவறான முடிவு என்பதை வரலாற்றுச் சான்றுகளுடன் பேசுகிறது.
‘ஏற்றுக்கொண்ட தலைமைக்கு சிவாஜி இறுதிவரை விசுவாசமாக இருந்தார். காங்கிரஸ் தன்னை மட்டம் தட்டியபோதெல்லாம் மனம் சோர்ந்துவிடாமல் அவமானங்களைத் தூக்கி எறிந்துவிட்டு தலைமைக்கு உண்மையாக இருந்தார்’ என்கிற வரிகள் நடிப்பில் உயர்ந்து விளங்கிய அவர் அரசியல் எனும் படிக்கட்டில் அடி எடுத்து வைக்காமலே இருந்திருக்கலாம் என்றே எண்ண வைக்கிறது.
-மானா பாஸ்கரன்
நன்றி:தி இந்து, 6/9/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818