ஏழாம் நம்பர் வீடு
ஏழாம் நம்பர் வீடு, சுப்ரஜா, வாதினி வெளியீடு, விலை 499ரூ.

எழுத்தாளர் சுப்ரஜா எழுதிய 40க்கும் மேலான சிறுகதைகளின் தொகுப்பு. அவருடைய சிறுகதைகள் குறித்து மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய ருசிகர கடிதமும் இணைக்கப்பட்டு உள்ளது.
ஏழாம் நம்பர் வீடு, திருட்டுப் பய, அது வேற இது வேற ஆகியவை மனதை தொடுகின்றன. 50 கிராம் மிக்சரும் 100 கிராம் அல்வாவும் கதையில் ஒரு சாதாரண மனிதனின் மன உணர்வு வெளிப்படுகிறது. அறை எண் 13, விடுதியில் தங்கி உயர்கல்வி பயில்வோருக்கும், சாக்கடை, அடுக்குமாடிவாசிகளின் அலட்சிய போக்கிற்கு சரியான சாட்டையடி.
எளிய, எதார்த்த நடையில் அமைந்துள்ள சிறுகதைகள் சிந்தனையை தூண்டுவதாக அமைந்துள்ளன. அன்றாட நிகழ்வுகளில் காணும் மனிதர்களை அனைத்து கதைகளிலும் கண் முன்னே கொண்டு நிறுத்துவதில் வெற்றி கண்டுள்ளார், சுப்ரஜா.
சிறுகதை பிரியர்களை மிகவும் கவரும்.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027247.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818