கண்ணன் எத்தனை கண்ணனடி
கண்ணன் எத்தனை கண்ணனடி, மாலதி சந்திரசேகரன், கைத்தடி பதிப்பகம், பக்.242, விலைரூ. 225.
வித்தியாசமான நூல் இது. பகவான் கண்ணனின் லீலைகளை கண்ணனுடன் தொடர்புடையவர்கள் வாய் மொழியாக தெரிவிப்பதாக அமைந்துள்ளது.
சுமார் 20 பாத்திரங்கள் கண்ணனின் லீலைகள் குறித்து பேசுகின்றன. குறிப்பாக, வசுதேவருக்கும் ரோஹிணிக்கும் மகனாகப் பிறந்த பலராமனின் பிறப்பு, அப்போது நடந்த சம்பவங்களை நந்தகோபன் கூறுகிறார்.
அடுத்ததாக, குழந்தை கிருஷ்ணர் மாம்பழம் விற்கும் கிழவியின் ஆசைப்படி, அவளை அம்மா என்றழைத்து மாம்பழம் பெற்ற லீலையை என்னவென்று சொல்வது? பகவானை வணங்கி நாம் ஓரடி எடுத்து வைத்தால், அவர் பத்து அடிகளை எடுத்து வைக்கிறார் என்பதற்கு ஏற்ப, பழக்கார கிழவியின் குடில் அன்னக்குவியலாக மாறியதும், ரத்தின வைடூரியங்களால் நிறைந்தது என்பதும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.
காமதா என்ற பசு, மகாலட்சுமி, ஹிரண்யாஷகன் மன்னனின் மகனான உத்சகன், பார்வதி தேவி, அபிநந்தன், குபேரன், கோவர்த்தன மலை, யமுனா நதி, தேவரிஷி நாரதர் என பலரும் கண்ணனுடனான தங்களது உறவையும், அவனது லீலைகளையும் சிலாகித்துக் கூறுகின்றனர்.
யசோதா மண்ணை உண்ட கண்ணனின் வாயை திறந்து காட்டச் சொல்லி கண்ணன் லோகரட்சகன் என்பதை உணர்ந்ததாகக் கூறுகிறாள். கிருஷ்ணரின் பெருமைகளை அருகிலிருந்துச் சொல்வதாக அமைந்துள்ள இந் நூல், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படிக்க உகந்த, ஆன்மிக மணம் கமழும் அற்புத நூல்.
நன்றி: 27/5/19, தினமணி.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029515.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818