கூட்டுறவு இயக்க முன்னோடிகள் வாழ்வும் தொண்டும்

கூட்டுறவு இயக்க முன்னோடிகள் வாழ்வும் தொண்டும், க.சிவாஜி, அலைகள் வெளியீட்டகம், தொகுதி 1 – பக்.312; ரூ.200; தொகுதி 2 – பக்.344; ரூ.260; தொகுதி 3- பக்.368; ரூ.350.

வேளாண்மையை முன்னேற்றம் அடையச் செய்ய விவசாயிகளுக்குக் கடன் வசதிகள் செய்து தரப்பட வேண்டும்; அதற்காக ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளும் வகையில் கடன் சங்கங்களைத் தொடங்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம், 1904 – இல் கூட்டுறவுச் சட்டத்தை இயற்றி, கூட்டுறவுச் சங்கங்களைத் தொடங்கியது.

விவசாயிகள் மட்டுமல்லாமல், நெசவாளர், ஆலைப் பணியாளர் என பல்வேறு தரப்பினருக்கும் பயன்படும் வகையில் பல கூட்டுறவுச் சங்கங்கள் தொடங்கப்பட்டன.

கூட்டுறவுத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என விரும்பிய பிட்டி தியாகராயர், மதுரை செளராஷ்ட்டிரா கூட்டுறவுச் சங்கம் என்பதை நிறுவி நெசவாளர்களுக்கு உதவி செய்த எல்.கே.துளசிராம், தமிழ்நாடு மாநிலக் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவராக 1940 முதல் 1942 வரை பணியாற்றிய இராமலிங்கம், கூட்டுறவு இயக்கத்திலும், கூட்டுறவுத்துறையிலும் நிர்வாகச் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட அந்நாளைய கூட்டுறவுத்துறை அமைச்சர் பி.டி.இராசன், பல்வேறு கூட்டுறவு இயக்கப் பணிகளில் ஈடுபாடு கொண்டிருந்த குன்றக்குடி அடிகளார், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பதவி வகித்த சுவாமிக்கண்ணு பிள்ளை, கூட்டுறவு வங்கியே விவசாயிகளுக்குத் தேவையான உரங்களைத் தயார் செய்ய வேண்டும் என்று கூறிய டி.என்.பழனிசாமி கவுண்டர், இந்தியன் வங்கி தோன்றுவதற்கு முக்கிய பங்காற்றிய ஆதிநாராயண ஐயா, அரிசி, பருப்பு உள்ளிட்ட வீட்டுக்குத் தேவையான பொருள்களை ஆலைத் தொழிலாளர்கள் வாங்க கூட்டுறவு பண்டக சாலைகளை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஏ.வேதாச்சல அய்யர், நெசவாளர், விவசாயிகள் பயன்படும் வகையில் கூட்டுறவு இயக்கத்தை நடத்த பல்வேறு வழிமுறைகளைக் கூறிய, திட்டங்களைச் செயல்படுத்திய பி.எஸ்.குமாரசாமி ராஜா உள்ளிட்ட  29 முன்னோடிகளின் வாழ்க்கை வரலாறு, கூட்டுறவு இயக்கம் சார்ந்த அவர்களின் தெளிவான சிந்தனைகள் ஆகியவற்றை இந்நூல் மிக அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளது.

நன்றி: 27/5/19, தினமணி.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *