ஆங்கிலம் அறிவோமே

ஆங்கிலம் அறிவோமே, பாகம் 3, ஜி.எஸ்.எஸ்., தி இந்து வெளியீடு, விலை 140ரூ. படித்துச் சிரி, சிரித்துப் படி புதிதாக ஆங்கிலத்துக்குள் அடியெடுத்து வைப்பவர்களை மட்டுமல்லாமல் ஏற்கெனவே மொழியில் ஆளுமை படைத்தவர்களையும் வெற்றிக்கொடி இணைப்பிதழில் வெளிவரும் ‘ஆங்கிலம் அறிவோமே’ தொடர் ஈர்த்துவருகிறது. எவ்வளவு கடினமான கருத்தையும் சிரிக்கச் சிரிக்கப் புரியவைக்க முடியும் என்பதைத் தன்னுடைய லாகவமான எழுத்துத் திறமையால் தொடர்ந்து நிரூபித்துக்காட்டுபவர் ஜி.எஸ்.எஸ். ஏற்கெனவே இரண்டு புத்தகங்களாக வெளியிடப்பட்ட இந்தத் தொடரின் மூன்றாவது பகுதி அண்மையில் வெளியானது. சிரித்து, ரசித்துப் படித்தபடியே உங்களுடைய ஆங்கில […]

Read more

சிவாஜி ஆளுமை பாகம் 3

சிவாஜி ஆளுமை, பாகம் 3, மு.ஞா.இன்பா, கைத்தடி பதிப்பகம், விலை 350ரூ. நடிப்புக்காகவே பிறந்த சிவாஜியின் நாடகம், திரையுலக வாழ்க்கை மட்டுமல்ல, அரசியல் பணிகள், தலைவர்களுடன் நட்பு என பல பரிணாமங்களையும் 348 பக்கங்களில் ஆழமாக எடுத்துக்காட்டுகிறது இந்நூல். சிவாஜி பற்றி நாம் அறியாத பல தகவல்களை தேடிக்கண்டுபிடித்து அருமையாக தொகுத்திருக்கிறார் நூலாசிரியர். எம்.ஜி.ஆர். படத்துக்காக தி.மு.க.அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் திரையரங்குகளை அடைத்து போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றிருக்கிறார். எம்.ஜி.ஆர்., சிவாஜி இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி என்பது அனைவருக்கும் தெரியும். […]

Read more

ப்ரம்ஹ ஸுத்ர சாங்கர பாஷ்யம்

ப்ரம்ஹ ஸுத்ர சாங்கர பாஷ்யம், பாகம் 3, தமிழ் உரை: ப்ரம்ம ஸ்ரீ கடலங்குடி நடேச சாஸ்திரிகள், ஆசிரியர்: கே.என்.சரஸ்வதி, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை 600017, பக்கங்கள் 540, விலை 500ரூ. வேதாந்த தத்துவத்தில் உபநிஷத்துகள், பகவத்கீதை, ப்ரம்ம ஸ்ரீதரம் என்ற மூன்று விஷயங்கள் முக்கியம். அவை ப்ரஸ்தானங்கள் எனப்படும் ப்ரம்ம சூத்ரத்தை நையாயப்ரஸ்தானம் என்கின்றன. நையாயம் என்றால் கோர்வையான தாக்கம். ப்ரம்ம சூத்ரங்கள் நாலு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1932ம் ஆண்டு சாங்கர பாஷ்யத்தின் 3வது பாகம் […]

Read more