ப்ரம்ஹ ஸுத்ர சாங்கர பாஷ்யம்

ப்ரம்ஹ ஸுத்ர சாங்கர பாஷ்யம், பாகம் 3, தமிழ் உரை: ப்ரம்ம ஸ்ரீ கடலங்குடி நடேச சாஸ்திரிகள், ஆசிரியர்: கே.என்.சரஸ்வதி, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை 600017, பக்கங்கள் 540, விலை 500ரூ.

வேதாந்த தத்துவத்தில் உபநிஷத்துகள், பகவத்கீதை, ப்ரம்ம ஸ்ரீதரம் என்ற மூன்று விஷயங்கள் முக்கியம். அவை ப்ரஸ்தானங்கள் எனப்படும் ப்ரம்ம சூத்ரத்தை நையாயப்ரஸ்தானம் என்கின்றன. நையாயம் என்றால் கோர்வையான தாக்கம். ப்ரம்ம சூத்ரங்கள் நாலு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1932ம் ஆண்டு சாங்கர பாஷ்யத்தின் 3வது பாகம் வெளியானபோது அதன் முகவுரையில் உரை ஆசிரியர் தனித்தமிழில் பெயர்க்க முடியாதவற்றை மைஸ்கிருதம் கலந்த மொழியில் பெயர்த்தும், மைஸ்கிருத பதத்தினால் பாஷ்யத்தின் பொருள் நன்கு விளக்க முடியாத இடத்தில் அப்படியே மைஸ்கிருத பதத்தைச் சொல்லி கூடுமானவரை தமிழில் அதன் பொருளை விளக்கி எழுதியிருக்கிறார். இது நாலாவது பதிப்பு. இருந்த போதும் மணிப்ரவாள நடை வீச்சு களையப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. ஓரளவு வேதாந்தக் கருத்து அடிப்படை, சங்கரர் பற்றிய நுண்ணுணர்வு ஆகியவை இருந்தால், இந்த பிரம்மாண்ட கருத்துகளை அறியமுடியும். – சிவா.  

—-

 

ஸ்ரீ ஐயப்பன் சரித்திரமும் படங்களும், ஏ. முத்துசாமி, ஸ்ரீ நிவாஸ் பைன் ஆர்ட்ஸ், சிவகாசி 626130, பக்கங்கள் 80. விலை 150ரூ.

இது ஐயப்ப பக்தர்களின் சிறந்த கையேடு ஆகும். ஸ்ரீ நிவாஸ் பைன் ஆர்ட்ஸ் இந்தக் கையேட்டை வண்ணத்தில் அப்படியே நேரில் பார்ப்பதுபோல அழகான காகிதத்தில் அமைத்திருப்பது மிகவும் சிறப்பாகும். காப்பிரைட் பெற்ற இந்த நூலைத் திறந்ததும், ஐயப்பனின் 18ஆம் படி சன்னிதானம் அப்படியே தத்ரூபமாக வண்ண போட்டோவில் மிளிர்கிறது. சபரிமலை செல்லும் பக்தர்களின் மனப்பூர்வ ஆராதனை இக்கையேடாக மிளிர்ந்திருக்கிறது. தனித்துவம் நிறைந்த சிறந்த படைப்பு.  

—-

 

தேன்துளிகள், க. துரியானந்தம், சஞ்சீவியார் பதிப்பகம், ஸ்ரீவாரி பிளாட்ஸ், ப.எண் 11, கவரைத் தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை 15., பக்கங்கள் 144, விலை 45ரூ.

இலக்கிய அழகு, ஆன்மிக உயர்வு போன்றவற்றை எடுத்துரைக்கும் சில பாடல்களைத் தெரிந்தெடுத்து விளக்க உரையை கதைப் பாங்கில் எழுதித் தொகுத்துள்ளார் புலவர் க.துரியானந்தம். பாடினி, தேனும் நீரும், சடகோபர் அந்தாதி, செம்புலப் பெயல்நீர் போன்ற பதினேழு தலைப்புகளில் அமைந்துள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் எளிய நடையில் அதே சமயம் ஆசிரியரின் நுண்மான் சிறப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. – பவானி மைந்தன். நன்றி: தினமலர், 22 ஜனவரி 2012.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *