சிவாஜி ஆளுமை பாகம் 3
சிவாஜி ஆளுமை, பாகம் 3, மு.ஞா.இன்பா, கைத்தடி பதிப்பகம், விலை 350ரூ.
நடிப்புக்காகவே பிறந்த சிவாஜியின் நாடகம், திரையுலக வாழ்க்கை மட்டுமல்ல, அரசியல் பணிகள், தலைவர்களுடன் நட்பு என பல பரிணாமங்களையும் 348 பக்கங்களில் ஆழமாக எடுத்துக்காட்டுகிறது இந்நூல். சிவாஜி பற்றி நாம் அறியாத பல தகவல்களை தேடிக்கண்டுபிடித்து அருமையாக தொகுத்திருக்கிறார் நூலாசிரியர்.
எம்.ஜி.ஆர். படத்துக்காக தி.மு.க.அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் திரையரங்குகளை அடைத்து போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றிருக்கிறார். எம்.ஜி.ஆர்., சிவாஜி இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி என்பது அனைவருக்கும் தெரியும்.
2-வதாக ஒரு படத்தில் இணைந்து நடிக்க நினைத்தனர் என்பது தெரியுமா? ஷோலே இந்தி படத்தை பார்த்த நடிகரும் தயாரிப்பாளருமான பாலாஜி, சிவாஜி, எம்.ஜி.ஆரை இணைத்து தமிழில் அந்த படத்தை தயாரிக்க நினைத்தார். அதற்கு இருவரும் ஒப்புக்கொண்டாலும், பின்னர் எம்.ஜி.ஆர். அரசியலில் தீவிர கவனம் செலுத்தியதால் நடிக்க முடியாமல் போனதாம்.துரதிர்ஷ்டசாலிகள் அவர்களல்ல. நாம்தான்.
இப்படி முக்கிய நிகழ்வுகள் மட்டுமின்றி, கிரிக்கெட் ரசிகரான சிவாஜி தெண்டுல்கரின் விசிறி, தெண்டுல்கர் அவுட்டானதும் டி.வி.யை அணைத்துவிடுவாராம் என்பது போன்ற துணுக்கு பெட்டிகளும் ஏராளமாக உள்ளன.
நன்றி: தினத்தந்தி, 24/10/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818