வைகைக் கதைகள்
வைகைக் கதைகள், சு.சண்முகசுந்தரம், காவ்யா, விலை 600ரூ.

வைகை நதியின் சிறப்புப் போல வைகை நதிக் கரையோரம் பிறந்த எழுத்தாளர்களும் வளமை மிக்கவர்கள். அத்தகைய எழுத்தாளர்களில் கவிஞர் வைரமுத்து, வேல ராமமூர்த்தி, இந்திரா சவுந்தரராஜன், நா. பார்த்தசாரதி, தி.சு. செல்லப்பா உள்பட 56 ஜாம்பவான்கள் எழுதிய அற்புதமான கதைகள் பஞ்சாமிர்தம் போல சுவையுடன் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அனைத்துக் கதைகளிலும் மதுரை வட்டார மணம் வீசுவதை அனுபவிக்க முடிகிறது. இந்தக் கதைகளுடன் அவற்றை எழுதிய எழுத்தாளர்களின் முகவரி உள்பட சிறு குறிப்பையும் தந்து இருப்பது பாராட்டத்தக்கது.
நன்றி: தினத்தந்தி, 24/10/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027295.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818