அழகர் அணை
அழகர் அணை, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கலைஞன் பதிப்பகம், விலை 100ரூ.
தமிழ்நாட்டில் சமீபகாலங்களாக எந்தவித புதிய அணைகளும் கட்டப்படவில்லை என்ற குறை மக்களிடையே உள்ளது. அதிலும் குறிப்பாக, விருதுநகர் மாவட்டம் ஒரு வானம் பார்த்த பூமியாகும். அங்கு விவசாய பாசனம் மற்றும் குடிநீருக்கு சரியான திட்டங்கள் இல்லை.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவாகாசி, சாத்தூர், விருதுநகர் பகுதிகளுக்காக குடிநீர் வசதிக்கும், நீர்பாசன வசதிக்கும் அழகர் அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை 90 ஆண்டுகளாக அப்படியே நிலுவையில் உள்ளது.
பெரியாறு, வைகை பாசனத்தில் எஞ்சி வீணாக கடலில் போய் கலக்கும் தண்ணீரின் ஒருபகுதியை அழகர் அணையில் தேக்கி வைக்கலாம். அழகர் அணையை ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கட்டலாம். இந்த அணை கட்டுவதால் வைகை ஆற்று பாசனத்துக்கோ, அங்குள்ள குடிநீர் திட்டங்களுக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.
கடலில் கலக்கும் தண்ணீரும் மழைகாலத்தில் மேற்குதொடர்ச்சி மலையில் பெய்து கீழே வீணாகப்போகும் தண்ணீரையும் பயனுள்ள முறையில் தேக்கி வைக்கலாம் என்ற இந்த அருமையான திட்டத்தை நூல் ஆசிரியரான ஐகோர்ட்டு வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மிகத் தெளிவாக நூலில் விளக்கி உள்ளார். அரசு இந்த நூலை ஒரு திட்ட அறிக்கையாகவே கருத்தில்கொண்டு, இதுகுறித்து ஆய்வு நடத்துவதற்காக விவர தொகுப்புகள் இந்த நூலில் இருக்கிறது. மக்களுக்கு மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட துறைகளின் ஆய்வுக்கும் வழிகாட்டும் நூல்.
நன்றி: தினத்தந்தி 6/6/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026857.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818