திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள்

திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள்,  (திருக்குறள்-பிரித்தாளுதல்-நுண்ணுரை- தடை விடையுடன்), இரா.பஞ்சவர்ணம்,பஞ்சவர்ணம் பதிப்பகம், பக்.408, விலை ரூ.400. திருக்குறளில் இடம்பெறும் தாவரங்களான எள், அமை, தாமரை, அனிச்சம், உள்ளி, குன்றிமணி, தினை, நெருஞ்சில், கரும்பு, நச்சுமரம் முதலிய தாவரங்கள் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், இந்தி, சம்ஸ்கிருதம் முதலிய மொழியில் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பதையும், அந்தந்த தாவரத்தின் வகைப்பாடுகளையும், அவற்றின் பண்புகளையும், அவற்றிற்குத் ‘தாவரத் தகவல் மையம்‘ தரும் பெயர்களையும் குறிப்பிட்டிருப்பது நூலின் சிறப்பு. எடுத்துக்காட்டுக்கு ஒன்று: பொருட்பாலில் ‘;சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி‘ என வரும் […]

Read more

மக்களாட்சி மாண்புற மக்கள் அரசியல்

மக்களாட்சி மாண்புற மக்கள் அரசியல்,  க.பழனித்துரை, தமிழ்நாடு சர்வோதய மண்டல்,  பக்.112, விலை ரூ.50. மக்களாட்சியில் மன்னராகக் கருதப்பட வேண்டிய மக்கள், வாக்குக்குப் பணம் பெறுபவராகவும், குறைகளைத் தீர்க்க மனு போடுபவராகவும் ஆகிவிட்டனர். அரசியல் கட்சிகளில் உள்கட்சி ஜனநாயகம் என்பது பெயரளவுக்குத்தான் உள்ளது. இந்தச் சூழலில் ஆட்சி, ஆளுகை, நிர்வாகம், மக்கள் நலன் இவை குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் அவ்வாறு சிந்தித்து எழுதிய பத்து கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். ஒவ்வொரு கட்டுரையிலும் கட்சிகளின் செயல்பாடு, ஆளுமைப் பண்பு, நிர்வாகத் திறன் […]

Read more

முஸ்லிம்கள் ஆண்ட இந்தியா

முஸ்லிம்கள் ஆண்ட இந்தியா,  மஹதி, யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், பக்.216, விலை ரூ.170. முஸ்லிம்களின் ஆட்சி பற்றியும், அவர்கள் நடத்திய போர்கள் பற்றியும் பல்வேறு கருத்துகள் கூறப்படும் நிலையில், கடந்த 60 ஆண்டுகளாக நூலாசிரியர் எழுதிய பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் உருவாயிருக்கிறது. இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்ட இந்நூலில் முதல் பாகத்தில் கான்சாகிப், திப்புசுல்தான், கேரளாவில் நடந்த மாப்பிள்ளைமார் புரட்சி பற்றியும் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் உள்ளன. இரண்டாம் பாகத்தில் இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி உருவானவிதம், குறிப்பாக தமிழகத்தில் முஸ்லிம்கள் பாண்டிய மன்னர் ஆட்சிக்குப் பிறகு, பல […]

Read more

கல்வெட்டில் தேவார மூவர்

கல்வெட்டில் தேவார மூவர், கா.ம.வேங்கடராமையா, சேகர் பதிப்பகம் சைவ மரபில் தேவார மூவருக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அன்றாட வழிபாட்டில் மூவர் தேவாரப் பாடல்களைப் பாடுகிறவர்கள் ஏராளம். அநேகமாக எல்லா சிவ ஆலயங்களிலும் நாவல்வர் திருவுருவச்சிலைகளை அமைத்து வழிபடுகிறார்கள். ‘கல்வெட்டில் தேவார மூவர்’ என்ற பேராசிரியர் கா.ம.வேங்கடராமையாவின் நூலைப் படிக்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வேரூன்றிய மரபு இது என்று புரிகிறது. தமிழகமெங்கும் பக்தர்களும் மன்னர்களும் தேவார மூவரை எப்படிக் கொண்டாடியிருக்கிறார்கள் என்பதை விளக்குகிறது இந்நூல். குறிப்பாக, இந்நூலில் வரும் பெயர்கள் அனைத்தும் நம்மை […]

Read more

ஒரு துணை வேந்தரின் கதை

ஒரு துணை வேந்தரின் கதை, டாக்டர் சே. சாதிக், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், பாகம் 1, விலை 400ரூ, பாகம் 2, விலை 350ரூ. நிறைய வேலை – குறைய வேலை என்பது என் ஏட்டில் இருந்ததில்லை – இப்போதும் இல்லை. என்னிடம் இருப்பதெல்லாம், ‘வேலை’ என்பது தான். வேலையை வேலை என்று பார்த்தால் அது ஒரு பாரம், பளு. வேலையையும் விளையாட்டாக எடுத்துக் கொண்டால் அங்கே வேதனை இருப்பதில்லை. வேகம் வரும். அது மகிழ்ச்சி தரும். ஒரு ஆத்ம திருப்தி மலரும். இதுவே என் […]

Read more

மார்க்சிய அறிவுத் தோற்றவியல்

மார்க்சிய அறிவுத் தோற்றவியல், நா.வானமாமலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 70, விலை50ரூ. இந்நுால், தமிழ்ப் புலமைத் தளத்தின் வழியாக, மார்க்சிய அறிவு ஆராய்ச்சி இயலைச் சிறப்பாகக் கற்பிக்கிறது. அறிவின் தோற்றம், உண்மை, பிழை முதலான அறிவுத் தத்துவப் பிரச்னைகளை எடுத்து விளக்கும்போது, தமிழ்த் தத்துவ நிலைப்பாடுகள் வழியாக விளக்குவதும், மார்க்சிய நிலைப்பாடுகளை எடுத்துக் கூறுவதும் மார்க்சியத்தை கற்க வழிவகுக்கிறது. இந்நுால் வழியாக வெளிப்படும் மார்க்சிய சிந்தனை, தமிழ் மரபில் வேர் பிடித்து வளரும் என்பது முன்னிறுத்தப்பட்டுள்ளது. நன்றி: தினமலர், 1/7/2018. இந்தப் […]

Read more

ராஜா விஸ்வநாதன்

ராஜா விஸ்வநாதன், பி,விஸ்வநாதன், அசோக்ராஜா பதிப்பகம், பக்.144, விலை 140ரூ. ஒரு நிமிட பழக்கமாக இருந்தாலும், ஓராண்டு பழக்கமாக இருந்தாலும், பிரிய வேண்டிய சூழ்நிலை வந்து பிரியும் போது அந்த மனங்கள் தவிக்கிறதே, அந்த தவிப்புக்குப் பெயர் தான் காதல்! காதல் மகிமையால் தான் இந்த பூமியும் சுழன்று கொண்டிருக்கிறது; இந்த உலகத்தையும் நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். ‘காதல் ஒரு மாயை; இனிக்கவும் செய்யும்… அழிக்கவும் செய்யும்’ என்ற கருத்தை ஆழமாக பதிவு செய்கிறது இந்நுால். நன்றி: தினமலர், 1/7/2018. இந்தப் புத்தகத்தை […]

Read more

சுடர்கள் ஏற்றும் சுடர்

சுடர்கள் ஏற்றும் சுடர், பொன்னீலன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 180, விலை 160ரூ. பேராசிரியர் நா.வானமாமலை நாட்டார் வழக்காற்றியலின் தந்தை. மார்ச்சிய லெனினிய அகராதி, தமிழர் நாட்டுப் பாமரர் பாடல்கள், தமிழர் நாட்டுப் பாடல்கள், புதுக்கவிதை – முற்போக்கும் பிற்போக்கும் – போன்ற அவரது நுால்கள் தமிழுக்கு சிறந்த பங்களிப்புகள். அவரது அன்றாட வாழ்க்கை, ரசனைகள், குறைகள், சாதனைகள், வேதனைகள், அவரைப் பற்றிய மதிப்பீடுகள் ஆகியவை பொன்னீலனால் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு காலகட்டத்தில் புதுக்கவிதை இடதுசாரி விமர்சகர்களால் அங்கீகரிக்கப்படவில்லை. தொ.மு.சி.ரகுநாதன், கலாநிதி […]

Read more

டால்ஸ்டாய் கதைகள் (யானைக்குத் தீனி மற்றும் கதைகள்)

டால்ஸ்டாய் கதைகள் (யானைக்குத் தீனி மற்றும் கதைகள்), தொகுப்பாசிரியர்: எம்.ஏ.பழனியப்பன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.160, விலை ரூ.120. உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் ஐந்து கதைகளின் தொகுப்பு இந்நூல். மனித வாழ்வை மிக அற்புதமாக, துல்லியமாகச் சித்திரிப்பவை. இந்நூலில் இடம் பெற்ற கதைகள் வேறொரு தளத்தில் மனித வாழ்வை, மனிதர்களின் மனதை, விருப்பு, வெறுப்புகளை, நல்லனவற்றை, தீயனவற்றைச் சித்திரிக்கின்றன. உண்மையான வாழ்க்கையும், கற்பனையும் கலந்ததான நிகழ்வுகள் நம்மை வேறொரு உலகத்தில் பயணம் செய்ய வைக்கின்றன. மக்களின் துன்பத்தைப்பற்றிக் கவலைப்படாமல் அதிக வரி வசூலித்து […]

Read more

புலம்பெயர்ந்தோர் கவிதையும், வலியும்

புலம்பெயர்ந்தோர் கவிதையும், வலியும்,  ஈழபாரதி, இனிய நந்தவனம் பதிப்பகம்,  பக்.72, விலை ரூ.80. இலங்கையின் இனப் பிரச்னை காரணமாக தமிழர்கள்அந்நாட்டை விட்டு புலம் பெயரும் நிகழ்ச்சி நீண்டகாலமாக நடந்து வருகிறது. 1983-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏராளமான தமிழ் மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தார்கள். இடம் பெயர்ந்த மக்கள் படும் துன்பங்கள் சொல்லி மாளாதவை. தமிழக அகதி முகாம்களில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், குடியமர்த்தப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் அகதி முகாம்களில் வாழும் தமிழ் மக்கள் படும் சிரமங்களை இந்நூல் விவரிக்கிறது. அகதி முகாம்களில் உள்ள […]

Read more
1 2 3 4 5 6 8