ராஜா விஸ்வநாதன்

ராஜா விஸ்வநாதன், பி,விஸ்வநாதன், அசோக்ராஜா பதிப்பகம், பக்.144, விலை 140ரூ. ஒரு நிமிட பழக்கமாக இருந்தாலும், ஓராண்டு பழக்கமாக இருந்தாலும், பிரிய வேண்டிய சூழ்நிலை வந்து பிரியும் போது அந்த மனங்கள் தவிக்கிறதே, அந்த தவிப்புக்குப் பெயர் தான் காதல்! காதல் மகிமையால் தான் இந்த பூமியும் சுழன்று கொண்டிருக்கிறது; இந்த உலகத்தையும் நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். ‘காதல் ஒரு மாயை; இனிக்கவும் செய்யும்… அழிக்கவும் செய்யும்’ என்ற கருத்தை ஆழமாக பதிவு செய்கிறது இந்நுால். நன்றி: தினமலர், 1/7/2018. இந்தப் புத்தகத்தை […]

Read more

பிரதமர் விஸ்வநாதன்

பிரதமர் விஸ்வநாதன், பி.விஸ்வநாதன், அசோக்ராஜா பதிப்பகம், பக். 168,விலை 90ரூ. தொழிலால் மேன்மை அடைந்த பணக்காரர்கள், பொது வாழ்வில் ஈடுபடும் அரசியல்வாதிகள் மற்றும் படித்து பட்டம் பெற்ற அதிகாரிகளால், நம் நாடு உலக அரங்கில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இவர்களில் சில பேர் செய்யும் தவறுகளை, நம்மால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதை கட்டுப்படுத்தி, நமக்கு அப்பாற்பட்ட சக்தியிடம் பொறுப்பை ஒப்படைத்து, நல்லதை பேசுவது, நினைப்பது, செய்வது என்ற கொள்கையை கடைபிடித்து வாழ்ந்தால், ஒவ்வொருவருக்கும் வெற்றி நிச்சயம் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்ற உண்மையை உணர்த்துகிறது […]

Read more

உலகப் பணக்காரர் விஸ்வநாதன்

உலகப் பணக்காரர் விஸ்வநாதன், பி. விஸ்வநாதன், அசோக்ராஜா பதிப்பகம், விலை 90ரூ. தலைப்பைப் பார்த்தால், ‘பில்கேட்ஸ்’ போல உலகப்புகழ் பெற்ற ஒரு பெரிய பணக்காரர் விஸ்வநாதன் என்றும், இது அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல் என்றும் எண்ணத் தோன்றும். அப்படியல்ல. இது ஒரு நாவல். இதை எழுதியவர் பெயர் பி.விஸ்வநாதன். அவர் எழுதியுள்ள 7 நாவல்களின் தலைப்புகளிலும் விஸ்வநாதன் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. நாவலைப் படிக்கும்போது, அவர் ஒரு புதுமையான எழுத்தாளர் என்பது புரிகிறது. நன்றி: தினத்தந்தி, 27/9/2017.

Read more