முஸ்லிம்கள் ஆண்ட இந்தியா
முஸ்லிம்கள் ஆண்ட இந்தியா, மஹதி, யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், பக்.216, விலை ரூ.170.
முஸ்லிம்களின் ஆட்சி பற்றியும், அவர்கள் நடத்திய போர்கள் பற்றியும் பல்வேறு கருத்துகள் கூறப்படும் நிலையில், கடந்த 60 ஆண்டுகளாக
நூலாசிரியர் எழுதிய பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் உருவாயிருக்கிறது.
இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்ட இந்நூலில் முதல் பாகத்தில் கான்சாகிப், திப்புசுல்தான், கேரளாவில் நடந்த மாப்பிள்ளைமார் புரட்சி பற்றியும் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் உள்ளன.
இரண்டாம் பாகத்தில் இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி உருவானவிதம், குறிப்பாக தமிழகத்தில் முஸ்லிம்கள் பாண்டிய மன்னர் ஆட்சிக்குப் பிறகு, பல பகுதிகளில் ஆட்சி செய்தது, முஸ்லிம் ஆட்சியினால் இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள், அவுரங்கசீப், ஹைதர் அலி, முஹம்மது பின் காஸிம் ஆகியோர் குறித்த எதிர்மறையான கருத்துகளுக்கு விளக்கம் அளிக்கும் கட்டுரைகள் அடங்கியுள்ளன.
ஆங்கிலேயரை எதிர்த்த போரில் கான் சாகிபும், திப்புசுல்தானும், மாப்பிள்ளைமாரும் செய்த தியாகங்கள் இந்திய சுதந்திரப் போர் வரலாற்றில் குறிப்பிடத்தக்கவை என்பதையும், முஸ்லிம்களின் நிர்வாக முறைகள், பண்பாடு, உணவுகள், ஆடை அணியும் முறைகள் என எல்லாமும் இந்நாட்டுடன் கலந்திருப்பதையும் நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
‘இஸ்லாமியரின் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் பெருமையை எடுத்துரைப்பதும், முஸ்லிம்களிடையே வந்து புகுந்த அனாச்சாரங்கள், மூட நம்பிக்கைகளைக் களைவதும் அவரது (நூலாசிரியரின்) நோக்கமாக இருந்தது‘ என்று பதிப்புரையில் குறிப்பிட்டிருப்பது உண்மை.
நன்றி: தினமணி, 9/7/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818